லைஃப்ஸ்டைல்
டாக்டர் நந்திதா அருண்

மகளிர் தின ஸ்பெஷல்: சாதனை பெண்மணி டாக்டர் நந்திதா அருண் சிறப்பு நேரலை- காணத் தவறாதீர்கள்

Published On 2021-03-08 03:21 GMT   |   Update On 2021-03-08 03:21 GMT
சத்தம் இல்லாமல் பல்வேறு சாதனைகளை செய்து வரும் டாக்டர் நந்திதா அருணின் சிறப்பு பேட்டி, மகளிர் தினமான இன்று மாலை 5 மணிக்கு மாலைமலர் பேஸ்புக் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பாகிறது.
நீரிழிவு நோய் நிபுணரான டாக்டர் நந்திதா அருண், கிண்டியில் உள்ள டாக்டர் ஏ.ராமச்சந்திரன் நீரிழிவு மருத்துவமனையில் நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வருகிறார். 13 வருடங்களாக நீரிழிவு சிறப்பு மருத்துவராக பணியாற்றி வரும் இவர் தன்னிடம் வரும் நோயாளிகளிடம் தனது அன்பான கவனிப்பு மற்றும் ஆலோசனைகள் மூலம் அவர்களின் பயத்தை போக்கி அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுகிறார். நீரிழிவு நோயாளிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை எளியமுறையில் புரியும் வகையில் சொல்லி வருகிறார். இவர் நீரிழிவு நோய் குறித்த ஆராய்ச்சிக்காக, ஜேபிஇஎப் பி.கேசவதேவ் இளம் ஆராய்ச்சியாளர் விருதை வென்றுள்ளார்.

மருத்துவத் துறை மட்டுமின்றி உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் கொண்டவர் டாக்டர் நந்திதா அருண். குறிப்பாக, பவர் லிஃப்டிங் போட்டிகளில் சத்தம் இல்லாமல் சாதனையை பதிவு செய்துவருகிறார்.

சென்னையில் பிப்ரவரி 7-ம் தேதி மாவட்ட பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இந்த போட்டியில் கலந்து கொண்ட  டாக்டர் நந்திதா அருண் தங்கப் பதக்கத்தையும் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளார். 57 கிலோ எடைப்பிரிவினருக்கான போட்டியில் 82.5 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கம் வென்றார். ஸ்குவாட் மற்றும் பெஞ்ச் பிரஸ் பிரிவில் மொத்தம் 172.5 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.



நீரிழிவு நிபுணராக, டாக்டர் நந்திதா எப்போதும் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளில் வலுவான நம்பிக்கை கொண்டவர். உடலை ஃபிட்டாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் முக்கியம் என்கிறார் டாக்டர் நந்திதா.

ஒட்டுமொத்த ஆரோக்கிய வாழ்வுக்கும், பெரும்பாலான நோய்களைத் தடுப்பதற்கும் தசை வலுப்படுத்துதல் உள்ளிட்ட உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது என்றும் உறுதிபட கூறுகிறார் டாக்டர் நந்திதா.

சத்தம் இல்லாமல் பல்வேறு சாதனைகளை செய்து வரும் டாக்டர் நந்திதா அருணின் சிறப்பு பேட்டி, மகளிர் தினமான இன்று மாலை 5 மணிக்கு மாலைமலர் பேஸ்புக் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பாகிறது.

வாசகர்கள் நீரிழிவு நோய் பற்றிய உங்களது சந்தேகங்களையும், கேள்விகளையும் பேஸ்புக் நேரலையில் டாக்டர் நந்திதா அருணிடம் கேட்கலாம்.
Tags:    

Similar News