லைஃப்ஸ்டைல்
மகளிர் தினம்

மகளிர் தினம்: பெண்களின் உரிமைக்கு குரல் கொடுப்போம்

Published On 2021-03-07 03:30 GMT   |   Update On 2021-03-07 09:15 GMT
வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள் தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றனர் என்றால் அதற்கு அவர்கள் வித்திட்ட பல்வேறு போராட்டங்களுக்கும், தியாகங்களுக்கும் கிடைத்த வெற்றியே இந்த மகளிர் தினமாகும்.
மகளிர் தினமானது பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் கொண்டாடப்படுகிறது.

வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள் தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றனர் என்றால் அதற்கு அவர்கள் வித்திட்ட பல்வேறு போராட்டங்களுக்கும், தியாகங்களுக்கும் கிடைத்த வெற்றியே இந்த மகளிர் தினமாகும்.

ஆணுக்கு சமமானவள் பெண் என்பதை நிரூபிக்கும் வகையில் பெண்கள் பல வெற்றிக்கனியை பறித்துக்கொண்டிருக்கிறார்கள். பெண் பிரதமர், பெண் ஜனாதிபதி, பெண் முதலமைச்சர்கள், பெண் விளையாட்டு வீரர்கள், விண்ணெளி வீராங்கனைகள் என்று உலகம் பெருமைப்படும் அளவிற்கு பெண்களின் சாதனைகளை  அடுக்கிக்கொண்டேபோகலாம்.

சேமிப்பு என்று வந்து விட்டால் அதிலும் பெண்கள் தான் சிறந்தவர்கள்.

பெற்றோர்களின் மீது அக்கறை செலுத்துவதில் பெண்கள் முதன்மையானவர்கள்.

எந்த விஷயத்தையும் பெண்கள் எளிதாக கற்றுக்கொள்வார்கள்.

தன்மானத்தை  காத்துகொள்வதில் பெண்கள் பெரும் பங்காற்றுவார்கள்.

எந்தவொரு விஷயத்திலும் பெண்கள் தெளிவு மற்றும் உறுதி கொண்டவர்களாக தோற்றம் அளிப்பார்கள்.

அதனால் தான் நாட்டை ஆட்சி செய்ய மன்னர் இருந்தாலும், ஒரு வீட்டை ஆட்சி செய்ய ஒரு பெண்ணால் தான் முடியும் என்பது எந்த காலத்திலும் மறுக்க முடியாத உண்மை என்பதை உணர்ந்து பெண்மையை  போற்றுவோம்.
Tags:    

Similar News