லைஃப்ஸ்டைல்
உங்களிடம் இருக்கும் கெட்ட நண்பர்களை அடையாளம் காண்பது எப்படி?

உங்களிடம் இருக்கும் கெட்ட நண்பர்களை அடையாளம் காண்பது எப்படி?

Published On 2021-01-15 08:45 GMT   |   Update On 2021-01-15 08:45 GMT
உங்க கூட்டத்தில் இருக்கும் நம்பத்தகாத நண்பரை எப்படி அடையாளம் காண்பது, அவர் உங்களுக்கு துரோகம் விளைவிப்பதை எப்படி அறிந்து கொள்வது வாங்க தெரிஞ்சுக்கலாம்.
ஒருவர் உங்களுக்கு நம்பத்தகாத நண்பராக இருந்தார் என்றால் அவர் உங்கள் மீது அதீத பொறாமை கொண்டவராக இருப்பார். உங்களை விட்டுக் கொடுக்க தயங்க மாட்டார். அவை உங்க ரகசியமாகக் கூட இருக்கலாம். ஆனால் அவரை உங்க கூட்டத்தில் இருந்து அடையாளம் காண்பது என்பது கடினம். அதனால் தான் இந்த மாதிரி தந்திரமான நண்பரை எப்படி அடையாளம் காணலாம் என்பதை அறிந்து கொள்வோம்.

அவர்கள் தவறே செய்தாலும் அதை ஒத்துக் கொள்ள மாட்டார்கள். எப்பொழுதும் மறுக்கும் நிலையிலேயே இருப்பார்கள். அவர்கள் பேசுவது ஒன்றாக இருக்கும். ஆனால் செய்வது ஒன்றாக இருக்கும். எப்பொழுதும் நேர்மாறாக நடந்து கொள்வார்கள். உதாரணமாக, அவர்கள் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஆதரிக்கிறார்கள் என்று சொல்வார்கள், உண்மையில் அவர்களின் நடத்தை வேறுபட்டு இருக்கும்.

அவர்கள் எப்போதும் மற்றவர்கள் மீது குற்றச்சாட்டை வைத்துக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் குற்றம் சாட்டுவதில் இருந்து பின்வாங்க மாட்டார்கள். எப்போதும் மற்றவர்களை நோக்கி விரல் காட்டுவது, குற்றஞ்சாட்டுவது போன்ற வேலைகளை செய்து கொண்டே இருப்பார்கள். நீங்கள் குற்றச்சாட்டு செய்வது தவறு என்று அவர்களிடம் எடுத்துரைத்தால் அவர்கள் தங்கள் நடத்தையை வெளிக்காட்ட ஆரம்பித்து விடுவார்கள்.

இத்தகைய நபர்கள் குறைவான பரிவுணர்வு கொண்டவர்களாகவும், கடினமான சூழ்நிலையில் ஒருவரிடம் எவ்வாறு உணர்திறன் கொண்டிருக்க வேண்டும் என்பதற்கான அடிப்படை நாகரீகம் இல்லாதவர்களாகவும் இருப்பார்கள். மிக மோசமான ஒன்று என்னவென்றால், அவர்கள் மற்றவர்கள் வலியைத் தூண்டியதற்கும் காயப்படுத்தியதற்கும் கூட, அவர்கள் மன்னிப்பு கேட்கவோ அல்லது எளிமையாக ‘மன்னிக்கவும்’ என்று சொல்லவோ மாட்டார்கள். மற்றவர்களை மதிக்க மாட்டார்கள்.

ஒருவரின் ரகசியத்தை காப்பேன் என்று கூறி சத்தியம் செய்தால் கூட காக்காமல் விட்டு விடுவார்கள். இதனால் மற்றவரின் வாழ்க்கை எந்தளவுக்கு கலங்கப்பட்டு உள்ளது என்பதைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பதை மறந்து மற்றவரிடம் எல்லாவற்றையும் சொல்ல தொடங்கி விடுவார்கள். இதனால் ரகசியமான விஷயங்கள் பரவத் தொடங்கி விடும்.

நட்பில் நம்பிக்கை என்பது மிகவும் அவசியம். ஆனால் அந்த பிணைப்பு உடையும் போது அது உங்க மனதை புண்படுத்த ஆரம்பித்து விடும். அவநம்பிக்கை, முரண்பாடு மற்றும் சிக்கலான மனப்பான்மை ஆகியவை மிகவும் பொதுவானவை ஆகும். இந்த மாதிரியான நண்பர்கள் ஒரு விஷயத்தில் கூட உங்களுடன் ஒட்டியிருக்க மாட்டார்கள். உங்களுடன் எப்பொழுதும் முரண்பாட்டில் ஈடுபடுவார்கள்.
Tags:    

Similar News