அழகுக் குறிப்புகள்
null

இயற்கையாகவே தலைமுடி கருமையாக சில வழிமுறைகள்

Published On 2024-04-17 10:35 GMT   |   Update On 2024-04-18 10:10 GMT
  • முடியை கருமையாக்க சிறந்த இயற்கை பொருள் கறிவேப்பிலை.
  • தேங்காய் எண்ணையில் வெந்தயத்தை ஊற வைத்து தேய்க்கலாம்.

எவ்வளவு அழகாக இருந்தாலும் முடி வெள்ளையாக மாறி விட்டால் சின்ன வயசு உள்ளவர்கள் கூட வயதான பெரியவர்கள் போல் தோற்றம் அளிக்க தொடக்கி விடுவார்கள்.

வெள்ளை முடி வருவதற்கான காரணங்கள்

வயிற்றில் அதிகளவு பித்தம் இருத்தல்.

மனதில் அதிகளவு கவலைகள் இருத்தல்.

அதிகளவு ரசாயனங்கள் முடிக்கு பயன்படுத்துதல்.

தலைமுடியில் மாசுக்கள் அதிகளவு படித்தல்.

ஹார்மோன் குறைபாடுகள்.

இயற்கையாக முடி கருமையாக சில வழிமுறைகள்:

நெல்லிக்காய்:

நெல்லிக்காய் பவுடரில் எலுமிச்சை சாற்றினை கலந்து தலையில் சிறிது நேரம் ஊற வைத்து பின்பு கழுவ வேண்டும். இப்படி சிறிது காலம் செய்து வந்தால் சிறந்த பலனை அடையாளம். எலுமிச்சை மற்றும் நெல்லிக்காய் அதிகளவு சாப்பிட பழகிக் கொள்ளுங்கள். இது முடிக்கு தேவையான ஆரோக்கியத்தை கொடுக்கும்.

 வெங்காயம்

வெங்காயம் தலைமுடி உதிர்வை தடுப்பதுடன் முடிக்கு தேவையான போஷாக்கினை வழங்கி முடியை கருமையாக்க உதவும். வெங்காய சாற்றினை தலையில் ஊறவைத்து பின்னர் ஷாம்போ கொண்டு கழுவ வேண்டும். இது தலையில் உள்ள கிருமிகளை அழிப்பதுடன் போஷாக்கினையும் வழங்குகின்றது. இதனை தினமும் செய்தால் தான் சிறந்த பலனை பெற முடியும்.

கறிவேப்பிலை

இளநரை மற்றும் முடியை கருமையாக்க சிறந்த இயற்கை பொருள் கறிவேப்பிலை. கறிவேப்பிலையை உலர வைத்து பொடியாக்கி தலையில் ஊற வைத்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்தால் இளநரை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

தலைக்கு வைக்கும் எண்ணெயில் கறிவேப்பிலை இலை அல்லது விதையை ஊறவைத்து தினமும் தலைக்கு வைத்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

 எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணையில் எலுமிச்சை சாற்றினை கலந்து தலையில் நன்கு ஊற வைத்து பின்பு ஷாம்போ கொண்டு அலச வேண்டும். இப்படி இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை செய்து வந்தால் சிறந்த பலனை அடையலாம்.

வெந்தயம்

வெந்தயத்தை அரைத்து தினமும் தலையில் நன்கு ஊற வைத்து கழுவி வந்தால் நாளடைவில் முடி கருமையாக மாறும். தேங்காய் எண்ணையில் வெந்தயத்தை ஊற வைத்து தினமும் தலைக்கு தேய்த்து வாருங்கள் முடி கருமையாக மாறும்.

செம்பருத்தி

செம்பருத்தி பூ மற்றும் இலையை எடுத்து அரைத்து தலையில் நன்கு ஊற வைத்து பின்பு கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு மூன்று முறை தொடர்ந்து செய்து வந்தால் தலை முடியை கருமையாக மாற்றலாம். இந்த செம்பருத்தி தலைக்கு தேவையான போஷாக்கினை கொடுப்பதுடன் முடி உதிர்வில் இருந்தும் தடுக்கின்றது.

தலைமுடியை கருமையாக மாற்ற இயற்கை வழிமுறைகளை பின்பற்றுவது தான் சிறந்தது. இது பக்கவிளைவுகளை ஏற்படுத்தாமல் நமது ஆரோக்கியத்தையும் பேண உதவுகிறது.

Tags:    

Similar News