இயற்கை அழகு

முகப்பரு, பருத்தழும்பு, வழுக்கை, சொரியாசிஸ், படர்தாமரைக்கு நவீன மருத்துவத்தால் தீர்வு

Update: 2022-10-06 08:00 GMT
  • தோல் அழகாகவும், மாசு மருவின்றி சுத்தமாகவும் இருக்க வேண்டும்.
  • சில தோல் மற்றும் முடி பிரச்சினைகளையும், அதற்கான தீர்வுகளையும் பார்க்கலாம்.

உடலின் தோல் பகுதி, உடலின் உள்ளுறுப்புகளை பாதுகாக்கும் கவசமாக இருப்பதுடன், உடலின் அழகை காட்டும் ஆடையாகவும் உள்ளது. சுத்தமாக சலவை செய்யப்பட்ட ஆடை போல் தோல் அழகாகவும், மாசு மருவின்றி சுத்தமாகவும் இருக்க வேண்டும். ஆனால் சில காரணங்களால் தோலில் பரு, தழும்பு, புழுவெட்டு, பொடுகு என்று பல பாதிப்புகள் ஏற்படுகிறது. இன்றைக்கு தோலில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் நவீன சிகிச்சைகள் இருப்பதால், அவற்றை எளிதில் குணப்படுத்திக் கொள்ள முடியும். பரவலாக காணப்படும் சில தோல் மற்றும் முடி பிரச்சினைகளையும், அதற்கான தீர்வுகளையும் பார்க்கலாம்.

முகப்பரு

பள்ளி, கல்லூரி மாணவிகள் பலரின் முக்கிய பிரச்சினையாக இருப்பது முகப்பரு. இந்த பருக்கள் முகத்தின் அழகை கெடுத்து அவர்களுக்கு கவலையை உருவாக்கி விடுகிறது. கடந்த காலங்களில் முகப்பரு பாதிப்பை போக்க சரியான மருந்து, மாத்திரைகள் இல்லை. சரியில்லாத மருத்துவ சிகிச்சையால் தழும்புகளும் ஏற்பட்டு விடும். கண்ட ஆலோசனைகளை எல்லாம் கேட்டு முகத்தில் கண்ட களிம்புகளையும் பூசி கடைசியில் முகத்தில் குழி, தழும்புகளை உண்டாக்கி முக அழகை நிரந்தரமாக கெடுத்துக் கொண்டு மன உளைச்சலால் அவதிப்படுவோர் நிறையவே உண்டு. இப்போது, முகப்பருக்களை நிரந்தரமாக போக்கும் ஐசோட்ரெடினாயின் மாத்திரை, மருந்துகள் வந்து விட்டன. இவை முகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் முகப்பருக்களை போக்கும். இவற்றை தோல் மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்த வேண்டும். 20 வார தொடர் சிகிச்சை எடுத்துக்கொண்டால் முகப்பருக்களை முற்றிலும் கட்டுப்படுத்த இயலும்.

பருத்தழும்பு

பருக்கள் ஏற்பட்டு சரியான சிகிச்சை பெறாத போது பருத்தழும்புகள் முகத்தில் தங்கி விடும். பருத்தழும்புகளால் சீர் கெட்டு போன முகத்தை லேசர் மற்றும் இதர நவீன சிகிச்சை மூலம் மீண்டும் பொலிவுள்ள அழகான முகமாக மாற்ற முடியும்.

முடி கொட்டுதல்

அன்றாடம் கொத்து கொத்தாக முடி கொட்டுதல் பெண்களுக்கு பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தும். இன்றைக்கு நீண்ட கூந்தல் இருப்பது அரிது. தற்கால உணவு, மன அழுத்தம், மருத்துவரின் ஆலோசனையின்றி கண்ட எண்ணெய்கள், குளியல் பூச்சுகளை பயன்படுத்துவது ஒரு காரணம். அம்மை, மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற நோய்கள் ஏற்பட்டால் அதற்கு 3 மாதங்கள் கழித்து மிக அதிக அளவில் முடி கொட்டும். பொதுவாக, முடி தொடர்பாக எந்த பிரச்சினை இருந்தாலும் அதற்கான அனைத்து தீர்வுகளையும் ஒரு தோல் மருத்துவரால் மட்டுமே தீர்வு காண முடியும். தற்போது, அனைத்து வகையான முடி கொட்டுதல் பிரச்சினைக்கும் உலகத்தரம் வாய்ந்த யூ.எஸ்.எப்.டி.ஏ. அங்கீகரித்த மருந்துகள் வந்துள்ளன. தற்போது புதியதாக அறிமுகமாகியுள்ள மருந்துகளால் 35 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஏற்படும் வழுக்கையும் சரி செய்ய முடியும். இவற்றை தோல் மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்த வேண்டும். முடி சிகிச்சைக்கு என தனியாகப் படிப்போ, டாக்டரோ கிடையாது.

வெண்படை நோய்

புதியதாக அறிமுகமாகியுள்ள மருந்துகளால் நாள்பட்ட வெண்படை நோய்க்கும் விரைவாகத் தீர்பு கான முடியும்.

இளநரை

முடியின் வேரில் இருந்து முடி வளர தொடங்கும்போது, அதில் உள்ள நிற அணுக்களில் இருந்து மெலானின் என்ற நிறத்தை உருவாக்கும் பொருள் கலக்கப்படும். இதனால், முடி கருமையடைகிறது. இந்த மெலானின் சுரப்பி உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் போது இளநரை ஏற்படுகிறது. இளநரை ஏற்பட பல்வேறு காரணங்கள் உண்டு. எந்த காரணத்தால் இளநரை தோன்றுகிறது என்பதை சரியாக கண்டறிந்து தகுந்த மாத்திரை, மருந்துகளை எடுத்துக்கொள்வதால் இளநரையை நீக்கி முடியை கருமையடைய செய்யலாம்.

பரம்பரை வழுக்கை

பரம்பரை வழுக்கைக்கு தீர்வு இல்லை என்பது பழைய நம்பிக்கை. இப்போது பக்க விளைவுகள் இல்லாத மிகச்சிறந்த மருந்து மாத்திரைகள் அமெரிக்க மருத்துவ கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவை தற்போது இந்தியாவிலும் சுலபமாக கிடைக்கின்றன. இவற்றை தோல் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பயன்படுத்தி பரம்பரை வழுக்கையை, பாதிப்பு ஏற்படும் முன் தடுத்து கொள்ளலாம். மேலும் இழந்த முடியையும் திரும்ப வளர வைக்கலாம். தற்போது இந்த மருந்துகளின் வருகையால் தலையில் வழுக்கையை மறைக்கும் முடி மாற்று அறுவை சிகிச்சைக்கான தேவை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொடுகு தொல்லை

பொடுகு என்பது, பல வகை தோல் வியாதிகளால் ஏற்படும் செதில் உதிர்தலை குறிக்கும். சாதாரண பொடுகு, சொரியாசிஸ், தலை தோல் அலர்ஜி, தலை தோல் வறட்சி போன்ற காரணங்களால் பொடுகு உருவாகலாம். ஒருவருக்கு பொடுகு தொல்லை இருந்தால் அதற்கான காரணத்தை துல்லியமாக கண்டறிந்து அதற்கு தகுந்த மருந்துகளை தர வேண்டும். அதை விடுத்து, கண்ட எண்ணெய்களை தேய்ப்பது, கை வைத்தியம் பார்ப்பது சரிவராது. தலையில் பொடுகு பிரச்சினையை அசட்டையாக விட்டு விட்டால் முடியின் ஆரோக்கியம் கெட்டு முடி கொட்டுவதையும் நிறுத்த முடியாது.

புழு வெட்டு

தலையில் ஆங்காங்கே செதுக்கியது போல் சொட்டை விழுவது புழுவெட்டு. தலையில் திடீரென்று வட்ட வடிவில் முடி உதிர்ந்து முடி இல்லாமல் போகும் பாதிப்பை புழுவெட்டு என்கிறோம். இது தலையில் மட்டும் அல்லாமல் புருவம், தாடி, மீசை போன்ற இடங்களிலும் வரலாம். சிலருக்கு சில இடங்களிலும், சிலருக்கு ஒட்டுமொத்தமாக தலைப்பகுதி முழுவதும் கூட பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. இதற்கு புழுவோ, பூச்சியோ காரணம் இல்லை. நமது உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு அணுக்களின் தவறான செயல்பாடே காரணம். வெங்காயம் தேய்ப்பது, கண்ட எண்ணெய்களை தேய்ப்பதால் புழுவெட்டு நீங்காது. தோல் மருத்துவர் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும். இதற்கு சமீபத்தில் மிகச் சிறந்த புது மருந்துகள் வந்துள்ளன.

சொரியாசிஸ்

சொரியாசிஸ் நோய்க்கும் தற்போது மிக சிறப்பான மருந்துகள் வந்துவிட்டன. இவற்றால் மிகக்குறுகிய காலத்தில் சிறந்த பலன் கிடைக்கும்.

படர்தாமரை

நவீன மருந்து மாத்திரைகள் மூலம் நாள்பட்ட படர்தாமரையும் நிரந்தரமாக சரிசெய்ய முடியும்.

ஆண் முகத்தில் முடி இல்லாமை

ஆண்களுக்கு முகத்தில் நல்ல ரோம வளர்ச்சி இருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. தற்போது, தாடி வளர்த்து விதவிதமாக ட்ரிம் செய்வது பேஷனாகவும் இருக்கிறது. பொதுவாக, ஆண்கள் முகத்தில் முடி வளர்ச்சி குறைவாக இருப்பதற்கு பரம்பரைத் தன்மை மற்றும் ஹார்மோன் குறைபாடு காரணமாகும். இதற்கு முறைப்படி காரணத்தை கண்டறிந்து, சிகிச்சை மேற்கொண்டால் முகத்தில் நன்கு முடி வளரச் செய்யலாம்.

பெண்களுக்கு தேவையற்ற முடி வளர்ச்சி

சில பெண்களுக்கு முகத் தாடை, உதட்டின் மேல் பகுதி போன்ற இடங்களில் தேவையற்ற முடி வளர்ச்சி இருக்கும். இந்த முடிகளை வேக்சிங் அல்லது திரெடிங் முறையில் அகற்றினால் அது இன்னும் அதிகமாக வளரும். தற்போது, இந்த தேவையற்ற முடிகளை அகற்ற உலகத்தரம் வாய்ந்த டையோடு லேசர், லாங் பல்ஸ் என்டியாக் லேசர் மற்றும் ட்ரிபிள் வேவ்லென்த் லேசர் கருவிகள் இங்கு இருக்கின்றன. இவற்றின் மூலம் மிக எளிதாக நிரந்தரமாக முகத்தில் உள்ள தேவையற்ற முடி வளர்ச்சியை நீக்க முடியும். இந்த லேசர் கருவிகளை முறையாக தெரிந்த தோல் நோய் மருத்துவர் மட்டுமே பயன்படுத்த முடியும். திருநங்கைகளுக்கு இந்த சிகிச்சை மிகப்பெரிய வரப்பிரசாதம். எங்கள் மருத்துவமனையில் இந்த கருவிகள் மூலம் நிறைய பேர் பயன்பெற்று மகிழ்வுடன் செல்கின்றனர்.

பச்சை அகற்றுதல்

சிறுவயதில் பேஷன் என்ற பெயரில் உடம்பில் பச்சை குத்துவது அதிகரித்து வருகிறது. உடம்பில் பச்சை குத்திக் கொண்டவர்கள் ராணுவம், காவல் துறை உள்ளிட்ட அரசு சீருடை பணிகளில் சேர முடியாது. தொடர்பில்லாத பெயர்களை பச்சை குத்தி வைத்திருக்கும் சிலருக்கு இது திருமண வாழ்க்கையில் பிளவைக் கூட ஏற்படுத்தி விடுகிறது. தற்போது, எங்கள் மருத்துவமனையில் உள்ள பைகோ செகண்ட் க்யூ ஸ்விட்ச்டு லேசர் மூலம் இந்த பச்சை அடையாளங்களை துல்லியமாக தோலுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நீக்கி விடுகிறோம்.

இதர பாதிப்புகள்

மேற்சொன்ன தோல் பிரச்சினைகள் மட்டுமின்றி தோல் அலர்ஜி, வெண்படை, குஷ்டம் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் அதிநவீன சிகிச்சைகள் உள்ளன. எந்த தோல் வியாதியையும் எளிதாக இவற்றால் சரி செய்ய முடியும். எனவே, உடலின் அழகை வெளிக்காட்டும் தோல் பகுதியை பொலிவாக வைத்து தன்னம்பிக்கையுடன் வாழ வழி செய்வோம்.

குறிப்பு: பெண்களுக்கு பெண்களாலேயே பரிசோதனை செய்யப்படும்.

தொடர்புக்கு, ஆதித்தன் தோல் முடி லேசர் மருத்துவமனை, ஆண்டாள்புரம், மதுரை.

செல்போன்-81110 00000,

73731 41111, 73731 42222

Tags:    

Similar News