இயற்கை அழகு

தினமும் மஞ்சள் தேய்த்து குளித்தால் கிடைக்கும் நன்மைகளும்... செய்யக்கூடாத தவறுகளும்...

Update: 2023-03-22 06:48 GMT
  • நம் ஆரோக்கியத்திலும், அழகிலும் மஞ்சள் முக்கிய பங்கை வகிக்கிறது.
  • மேலும் தோல் சுருக்கம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

பெண்கள் தங்கள் உடலில் உள்ள முடியை நீக்க கெமிக்கல் கலந்த க்ரீம் உள்பட பல்வேறு முறைகளை கடைபிடித்து வருகின்றனர். கெமிக்கல் கலந்த க்ரீமை பயன்படுத்துவதால் பல தீங்குகள் ஏற்படுகின்றன. மஞ்சள் நம் உடலுக்கு பல அற்புதமாக நன்மை வழங்குகிறது. நம் ஆரோக்கியத்திலும், அழகிலும் மஞ்சள் முக்கிய பங்கை வகிக்கிறது. உடலில் தேவையில்லாமல் முளைக்கும் ரோமங்களை இயற்கையான முறையில் நீக்க மஞ்சளைத் தவிர சிறந்த பொருள் வேறெதுவுமில்லை.இந்த நிலையில் மஞ்சள் பூசுவதால் என்னென்ன நன்மைகள் என்பதை பார்ப்போம்

பெண்கள் மஞ்சள் பூசி குளிக்கும் முறையை மீண்டும் கடைபிடித்தால் தங்களுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு, நல்லதொரு பாதுகாப்புக் கவசம் கிடைக்கும்.

தினந்தோறும் மஞ்சள் பூசி குளிப்பதால் உடலில் முடி தோன்றாமல் இருப்பது மட்டுமின்றி தோலில் பாதிப்பு உண்டாகாமல் 'பள பள'வென ஜொலிக்கும் தேகத்தைப் பெறலாம்.

மேலும் தோல் சுருக்கம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. மஞ்சள் தேய்த்துக் குளித்து வருவதால் பாதங்களில் தோன்றும் பித்த வெடிப்புகள் நீங்கும். மேலும் ஈரமான இடங்களில் தொடர்ந்து இருப்பதால் உண்டாகும் சேற்றுப் புண் வராமலும் தடுக்கப்படும்.

சிலர் மஞ்சளை பூசிவிட்டு அதை கழுவிவிட்டு அதன் பிறகு சோப்பு போட்டு பேஸ்வாஷ் செய்வார்கள். அது தவறு. இது போல் நாம் செய்தால் தோலில் உள்ள சிறிய துளைகள் எல்லாம் அடைத்துக் கொள்ளும். மஞ்சளில் இருக்கும் குர்குமின் நமது தோலில் உள்ள துளைகளை திறந்து முகத்தை ஹைட்ரேட் செய்து, மைக்ரோபியல் எஃபெக்ட்டை கிரியேட் செய்யும்.

முகப்பருக்கள், வெயில் காலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகளுக்கு மஞ்சள் ஒரு நல்ல தீர்வாக இருக்கும். சோரியாசிஸ் உள்ளிட்ட நோய்களுக்கு கூட மஞ்சளுடன் வேப்பிலையை சேர்த்து அப்ளை செய்து வந்தால் சருமம் பொலிவடையும். சிலர் மஞ்சளுடன் தயிர், லெமன், ஆப்பிள் வினிகர் இப்படி நிறைய சேர்ப்பார்கள். எல்லாவற்றுடனும் இல்லாமல் ஏதாவது ஒரு பொருளுடன் கலந்து முகத்திற்கு போட்டால் அது மிகவும் எஃபெக்ட்டிவ்வாக இருக்கும்.

எலுமிச்சையுடன் சேர்த்து மஞ்சளை முகத்தில் அப்ளை செய்தால் இறந்த செல்களை அகற்றும். தயிருடன் மஞ்சளை சேர்த்து அப்ளை செய்யும் போது அந்த ஸ்கின்னுக்கு பொலிவையும் கண்டிஷனிங் எஃபெக்ட்டை தரும். ரோஸ் வாட்டருடன் கலந்து மஞ்சளை முகத்தில் தேய்த்தால் கூலிங் எஃபெக்ட்டை கொடுக்கும். சந்தனத்துடன் மஞ்சளை சேர்க்கும் போது டேனிங்கை நீக்கி முகத்தை பொலிவாக்கும்.

பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்லும் போது இல்லாவிட்டாலும் தினமும் மாலை வேளைகளிலாவது மஞ்சளை முகத்தில் தேய்த்து இயற்கையான அழகை பெறுவோம்.

Tags:    

Similar News