லைஃப்ஸ்டைல்
வைர நகைகளைப் பராமரிக்க இதோ சில டிப்ஸ்

வைர நகைகளைப் பராமரிக்க இதோ சில டிப்ஸ்

Published On 2021-11-05 04:24 GMT   |   Update On 2021-11-05 07:48 GMT
வைரநகைகள் என்பது நாளுக்கு நாள் விலை ஏறிக்கொண்டே செல்வதால் அதில் முதலீடு செய்வது என்பது புத்திசாலித்தனமான ஒன்று என்றே சொல்லலாம்.
வைரமானது அணிந்திருப்பவருக்கு பலத்தையும் தைரியத்தையும் கொடுக்கும் என்று நம்பப்பட்டதால் பழங்காலத்தில் அரசர்கள் போருக்குச் செல்லும் பொழுது வைரங்களை அணிந்து சென்றதாகப் புராணங்கள் கூறுகின்றன.

* எப்பொழுதும் வைர மோதிரம், வைர மூக்குத்தி, வைரக்கம்மல்களை அணிந்து கொள்பவராக இருந்தால் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, முகத்திற்கு ஃபேஷியல் செய்து கொள்வது, பாத்திரம் கழுவுவது மற்றும் கெமிக்கல்கள் கொண்டு வீட்டைச் சுத்தப்படுத்துவது போன்ற சந்தர்ப்பங்களில் வைர நகைகளைக் கழற்றி வைத்து விடுவது உத்தமமாகும்.

* அதே போல நீச்சல் குளத்தில் நீராடும்பொழுதும் வைர நகைகளைக் கழற்றி வைத்து விட வேண்டும். ஏனென்றால், நீரில் கலந்திருக்கும் குளோரினானது வைரத்திற்கு எதிர்விளைவை ஏற்படுத்தலாம்.

* வைர நகைகளைத் தனித்தனியாக அதற்கென்றே கொடுக்கப்பட்ட பெட்டிகளில் வைத்திருப்பது சிறந்ததாகும். என்னதான் வைர நகைகளாகவே இருந்தாலும் ஒரே பெட்டியில் வைக்கும்பொழுது ஒன்றுடன் ஒன்று உரசி சேதமாவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

* வைர நகைகளை வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு மென்மையான குளியல் சோப்பைக் கலந்து சாஃப்ட் பிரஷ்ஷினால் சுத்தம் செய்யலாம்.

* கழுவிய பிறகு மென்மையான துணியினால் துடைத்து சிறிது நேரம் காற்றில் ஆறியபின் அணிந்து கொள்ளலாம்.

* வீட்டில் வைர நகைகளைச் சுத்தப்படுத்த முடியாதவர்கள் நகைக் கடைகளில் கொடுத்தும் சுத்தம் செய்து கொள்ளலாம்.

* வைர நகைகளை வருடம் ஒரு முறையாவது நகைக்கடைகளில் கொடுத்து அதன் தரத்தைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது.

* வைரநகைகள் என்பது நாளுக்கு நாள் விலை ஏறிக்கொண்டே செல்வதால் அதில் முதலீடு செய்வது என்பது புத்திசாலித்தனமான ஒன்று என்றே சொல்லலாம்.

* வைர மோதிரங்கள் மற்றும் சிறிய வைரக்கம்மல்கள் பத்தாயிரம் முதலே கிடைக்கின்றன. வைரத்தை வாங்கும்பொழுது கவனிக்க வேண்டியவை.

* 4Cs அதாவது கேரட் வெயிட், கலர் கிரேடு, க்ளாரிட்டி கிரேடு மற்றும் கட்கிரேடு இவற்றை ஆராய்ந்த பின்னரே வைர நகைகளை வாங்க வேண்டும்.

* வைர நகைகளை வாங்கும் பொழுது அதனுடன் தரப்படும் தரச் சான்றிதழை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

Tags:    

Similar News