லைஃப்ஸ்டைல்
சரும ஆரோக்கியத்திற்கு வாழை இலையை எப்படி பயன்படுத்தலாம்

சரும ஆரோக்கியத்திற்கு வாழை இலையை எப்படி பயன்படுத்தலாம்

Published On 2021-03-15 07:28 GMT   |   Update On 2021-03-15 07:28 GMT
உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ள வாழை இலையை சரும ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் எப்படி பயன்படுத்தலாம் என்பதை இங்கே காண்போம்.
வாழை இலையில் உடலுக்கு நன்மை தரும் பல்வேறு சத்துக்கள் உள்ளன என்பது நம் அனைவருக்கும் தெரியும். இவை தவிர சரும ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் வாழை இலையை பயன்படுத்தலாம் என்பதை இங்கே காண்போம்.

சரும பிரச்சனைகளான பொடுகுத் தொல்லை, சொறி, சிரங்கு மற்றும் தீப்புண் போன்றவற்றிற்கு வாழையிலையை அரைத்து பூசி வந்தால், நல்ல பலன் கிடைக்கும். வடிகட்டிய வாழையிலை சாற்றினை குளிர்பதன பெட்டியில் உறைய வைத்து ஐஸ்கட்டியாக்கி அதனை சருமத்தில் தேய்த்தால் சருமம் மென்மையடையும்.

வாழையிலையில் அழகை கூட்டும் அலட்டாயின் எனும் சத்து உள்ளது. அரைத்த வாழையிலையுடன் தயிர் அல்லது பன்னீர் சேர்த்து சருமத்தில் பூசி வந்தால் சரும பொலிவு அதிகரிக்கும். மேலும் வாழையிலையில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன. இவை சருமப் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்கின்றன.

வாழையிலை சாற்றை தலையில் தடவி குளித்து வந்தால், பொடுகு தொல்லை நீங்கும். வெயிலினால் சரும பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் அந்த இடத்தில் வாழை இலை விழுதை தடவினால் விரைவாகவே குணமாகும்.
Tags:    

Similar News