லைஃப்ஸ்டைல்
இந்த வழிமுறைகளை பின்பற்றினால் கால் அழகை பாதுகாக்கலாம்

இந்த வழிமுறைகளை பின்பற்றினால் கால் அழகை பாதுகாக்கலாம்

Published On 2021-02-16 07:28 GMT   |   Update On 2021-02-16 07:28 GMT
அழகை பொறுத்தவரையில் முகம் மற்றும் கைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கால்களுக்கு கொடுக்க மறந்து விடுவோம். இந்த வழிமுறைகளையெல்லாம் கடைப்பித்து வந்தால் கால்களை அழகாக வைத்து கொள்ளலாம்.
நாம் அனைவரும் எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்போம். ஆனால் அழகை பொறுத்தவரையில் முகம் மற்றும் கைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கால்களுக்கு கொடுக்க மறந்து விடுவோம். நமது உடலின் பாரத்தை சுமப்பதே கால்கள் தான். அத்தகைய கால்களை எப்போதும் பொலிவோடு வைத்துக்கொள்ள ஒரு சில டிப்ஸ்...

அழுக்குகள் இருப்பதால் தான் கால்கள் பெரும்பாலும் பொலிவிழந்து காணப்படுகின்றன. கால்களுக்கான ஸ்கிரப்பர் போட்டு ஊற வைத்து தேய்க்கும் போது இறந்த செல்கள் நீங்கி, நன்கு சுத்தமாக இருக்கும். கல் உப்பு மற்றும் மஞ்சள் கலந்த வெதுவெதுப்பான நீரில் அரை மணி நேரம் கால்களை ஊறவைத்து பின்பு நன்றாக தேய்த்து கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

காலணிகளை தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருகக வேண்டும். ஸ்டைலுக்காக தேர்ந்தெடுக்கும் காலணிகளால் கூட கால்களுக்கு அதிகமான பிரச்சனைகள் வரலாம். நாம் நடப்பதற்கு ஏதுவான வகையில் காலணிகளை தேர்ந்தேடுக்க வேண்டும்.

பாதங்களை அதிகமாக பாதிப்பவை, பித்த வெடிப்புகளும், விரல் இடுக்குகளில் ஏற்படும் புண்களும் தான். மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின்பு தண்ணீரால் கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

மருத்துவ மூலிகைகளான மஞ்சளும், வேம்பும் பாதங்களை பாதுகாப்பபதில் மிக முக்கியமானவை, வேப்பிலை, மஞ்சளுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசலாம்.

கால்கள் தாங்கும் அளவிற்று தண்ணீரை சூடுபடுத்தி அதில் சிறிதளவு உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும், அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம்வைத்திருந்து பின் ஸ்கிரப்பர் போட்டு தேய்த்து கழுவினால்பாதத்தில் இருக்கும் இறந்த செல்கள் உதிர்ந்து விடும். இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவது தவிர்க்கப்படுவதோடு பாதம் பட்டு போன்று மென்மையாக காணப்படும்.

குளித்து முடித்ததும் பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். இரவு நேரத்தில் உறங்கபோகும் முன் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவி சிறிது தேங்காய் எண்ணெய் தடவி விட வேண்டும். இந்த வழிமுறைகளையெல்லாம் கடைப்பித்து வந்தால் கால்களை அழகாக வைத்து கொள்ளலாம்.
Tags:    

Similar News