லைஃப்ஸ்டைல்
கூந்தல் மற்றும் சருமத்திற்கு அழகு தரும் கிரீன் டீ

கூந்தல் மற்றும் சருமத்திற்கு அழகு தரும் கிரீன் டீ

Published On 2021-02-09 04:19 GMT   |   Update On 2021-02-09 04:19 GMT
வீட்டில் மீந்து போன கிரீன் டீயை கொண்டு கூந்தல் மற்றும் சருமத்திற்கு அனைத்து விதமான வீட்டு வைத்தியங்களையும் முயற்சி செய்து பார்க்கலாம்.
கோடை காலத்தில் ஒரு கப் டீ குடிப்பது அந்த அளவிற்கு இதமாக இருக்காது. ஆனால் ஒரு வேளை உங்களுக்கு டீ பிடிக்கும் என்றால் நீங்கள் ஐஸ் டீக்கு மாறி விடலாம். இந்த மாற்றத்தை உங்களால் உடனடியாக ஏற்று கொள்ள முடியாது. இருப்பினும் நீங்கள் வழக்கமாக பருகும் டீயை கொஞ்ச காலம் ஒதுக்கி வைத்து விட்டு மூலிகை டீயை பருகுங்கள். வீட்டில் மீந்து போன டீயை கொண்டு கூந்தல் மற்றும் சருத்திற்கு அனைத்து விதமான வீட்டு வைத்தியங்களையும் முயற்சி செய்து பார்க்கலாம்.

1. கிரீன் டீக்கு ஆன்டி மைக்ரோபியல் தன்மை இருப்பதால் அதனை மௌத் வாஷாக தாராளமாக பயன்படுத்தலாம். பற் சொத்தையை ஏற்படுத்துகின்ற ஸ்ட்ரெப்டோகாக்கஸ் மியூட்டன்ஸ் என்ற பாக்டீரியாவை எதிர்த்து போராடும் கேட்டசின் கிரீன் டீயில் உள்ளதால் இது ஒரு சிறந்த மௌத் வாஷ் என தி இந்தியன் சொசைட்டி ஆஃப் பீடோடான்டிக்ஸ் அன்டு பிரிவென்டிவ் டென்டிஸ்ட்ரி) நடத்திய ஆய்வு கூறுகிறது. இதற்கு எந்த கிரீன் டீயை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். கொதிக்கும் தண்ணீரில் தேயிலையை போட்டு ஒரு நிமிடம் அப்படியே விட்டு ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து அந்த நீரை கொண்டு வாய் கொப்பளித்து வரலாம்.

2. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி தன்மை டீக்கு இருப்பதால் அதனை குளிக்கவும் பயன்படுத்தலாம். நீங்கள் குளிக்கும் தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று டீ பையை போட்டு ஊற வைத்து விடுங்கள்.

3. காய வைத்து இடித்து எடுத்த டீ இலைகளை கொண்டு வீட்டிலே சோப்பு செய்யலாம். 400 கிராம் அளவிற்கு டபுள் ஸ்ட்ராங்கான கிரீன் டீயை தயாரித்து கொள்ளுங்கள். அதற்கு பயன்படுத்திய இலைகளை தூக்கி எறியாமல் சேகரித்து வையுங்கள். யூக்கலிப்டஸ் எண்ணெய், 4 – 8 தேக்கரண்டி கிரீன் டீ இலைகளை செய்து வைத்த கிரீன் டீ ஆறிய பின் சேர்த்து சோப்பு செய்யும் மோல்டில் ஊற்றி வையுங்கள். இதனை ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.

4.கிரீன் டீயை கொண்டு நீங்களே உங்களுக்கான பாடி ஸ்கிரப்பை தயாரித்து கொள்ளலாம். சொரசொரப்பாக இருக்கும் கிரீன் டீ இலைகள் சருமத்தில் உள்ள இறந்த அணுக்களை நீக்க உதவுகிறது. அதோடு இந்த இலைகளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகள் உங்கள் சருமத்தை புதுப்பிக்க செய்கிறது.

5. நல்ல ஒரு ஆரோக்கியமான மற்றும் தற்காலிகமான ஹேர் டையாக டீ பயன்படுகிறது. நல்ல ஸ்ட்ராங்கான டீயை தயாரித்து கொள்ளவும். இது நன்றாக ஆறிய பின் ஒரு துணியை அதில் முக்கி உங்களுக்கு தேவையான கலர் கிடைக்கும் வரை தலைமுடியில் தடவுங்கள்.
Tags:    

Similar News