லைஃப்ஸ்டைல்
எந்த சருமத்திற்கு எந்த வகையான பழச்சாறு பயன்படுத்தலாம்

எந்த சருமத்திற்கு எந்த வகையான பழச்சாறு பயன்படுத்தலாம்

Published On 2020-11-05 06:16 GMT   |   Update On 2020-11-05 06:16 GMT
சருமத்தின் சூழலும், அதன் தன்மையும் தெரியாமல் எல்லாவகை பழங்களையும் எல்லோருடைய முகத்துக்கும் பயன்படுத்தி விட முடியாது. குறிப்பாக முகப்பரு இருப்பவர்கள், பேஸ்பேக்குக்கு பயன்படுத்தும் பழங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
பழங்களால் உருவாக்கப்படும் பேஸ்பேக்குகள் பெண்களின் சருமத்தை பளபளப்பாக வைக்கிறது. ஆனாலும் சருமத்தின் சூழலும், அதன் தன்மையும் தெரியாமல் எல்லாவகை பழங்களையும் எல்லோருடைய முகத்துக்கும் பயன்படுத்தி விட முடியாது. குறிப்பாக முகப்பரு இருப்பவர்கள், பேஸ்பேக்குக்கு பயன்படுத்தும் பழங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சில வகை பழங்கள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்துவது உண்டு.

எந்தவகை பழங்கள் என்னென்ன பலன் தரும் என்பதை இனி பார்க்கலாம்.

* திராட்சை பழத்தை மிக்சியில் போட்டு அடித்து அந்த சாறை பயன்படுத்தி சருமத்திற்கு தேய்த்து மஜாஜ் செய்தால் சருமம் பளபளப்பாகும். மென்மையாகவும் இருக்கும்.

* சந்தனம், கிளிசரின், மூன்று சொட்டு பாதாம் எண்ணெய் போன்றவைகள் சேர்த்த பேஸ்பேக் முகத்தில் இருக்கும் கருப்பு திட்டுகளைப் போக்கி முகத்தை மினுமினுப்பாக்கும்.

* ரசாயன பொருட்கள் சேர்ந்து பிளீச்சை பயன்படுத்தும் போது அலர்ஜி ஏற்படுபவர்கள் சந்தனம், பாதாம் எண்ணெய், தேய்காய்ப்பால் சேர்த்த சிரப்பை பயன்படுத்தினால் போதும். கருப்பு திட்டுகள் நீங்கிய பின்பு பப்பாளி சாறும், முந்திரிப்பழச்சாறும் சேர்ந்து மசாஜ் செய்ய வேண்டும். சரும அழகு அதிகரிக்கும்.

* சோயா மில்க், திராட்சை சாறு, தக்காளி சாறு ஆகியவற்றை மட்பேக் குடன் சேர்த்து பயன்படுத்துங்கள். சருமத்தில் இருக்கும் சுருக்கம் நீங்கி இளமைப்பொலிவு கிடைக்கும்.

* ஓட்மிலும், சோயாவும் சேர்ந்து ஸ்கிரப் செய்தால் முக சருமம் நிறமாகும்.
Tags:    

Similar News