லைஃப்ஸ்டைல்
இறந்த செல்களை அகற்றி சருமத்துக்கு உயிரூட்டம் தரும் கிரீன் டீ

இறந்த செல்களை அகற்றி சருமத்துக்கு உயிரூட்டம் தரும் கிரீன் டீ

Published On 2020-09-10 04:17 GMT   |   Update On 2020-09-10 04:17 GMT
கிரீன் டீ உடலுக்கும் மனதுக்கும் மட்டுமே சிறந்தது என்று நினைத்துகொண்டிருந்தால் இனி அந்த எண்ணத்தை மாற்றி கொள்ளுங்கள். அது சருமத்துக்கும் மிகவும் சிறந்தது.
பொதுவாகவே அழகு பராமரிப்பு செய்யும் போது ஒவ்வொரு சருமத்துக்கும் ஒவ்வொரு விதமான பராமரிப்பு செய்ய வேண்டும். எல்லா வகையான சருமத்துக்கும் ஒரு பொருளை கொண்டு பராமரிக்கலாம் என்று சொல்லக்கூடிய வகையில் வெகு சில பொருள்களே உண்டு. அப்படியான பொருள்களில் கிரீன் டீ பேக் ஒன்று. இந்த கிரீன் டீ பேக் பொருளை கொண்டு சருமத்தின் ஒட்டு மொத்த அமைப்பையும், அழகையும் ஏன் நிறத்தையும் கூட மேம்படுத்திவிட முடியும்.

கிரீன் டீயில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றிகள் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் ஆன் டி மைக்ரோபியல் பண்புகள் கொண்டிருப்பதால் இவை முகப்பருவுக்கு எண்ணெய் சருமத்துக்கும் நல்ல தீர்வாக இருக்கிறது.

கிரீன் டீயில் இருக்கும் பாலிபினால்கள் சருமத்துக்கு பயன்படுத்தும் போது, முகத்தில் வடியும் எண்ணெய் சுரப்பை குறைக்க உதவுவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

முகத்தில் சருமத்தில் உண்டாகும் பாக்டீரியா தொற்று முகப்பருக்களின் வளர்ச்சியை அதிகரித்துவிடக்கூடும். இந்த பாலிபினால்கள் இந்த பாக்டீரியாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்த உதவுகிறது. கிரீன் டீயில் இருக்கும் கேடசின்கள் பாக்டிரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பதோடு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை கட்டுப்படுத்தும் குணங்களையும் கொண்டிருக்கின்றன.

இயல்பாக கிரீன் டீ உடலில் இருக்கும் நச்சை நீக்குவது போன்றே சருமத்தில் இருக்கும் நச்சையும் நீக்கி வெளியேற்றுவதால் முகப்பரு மற்றும் பருக்களின் பிரச்சனையிலிருந்து எளிதாக நிவாரணம் பெற முடிகிறது. பருக்கள் இருக்கும் பகுதியில் கிரீன் டீபேக் கொண்டு நேரடியாக தடவி மசாஜ் போன்று செய்வதன் மூலம் பருக்கள் குறைகிறது.

சருமத்தை ஈரப்பதமாக்ககூடிய குணங்கள் கிரீன் டீயிலும் உண்டு. இதில் வைட்டமின் ஈ உள்ளது. இவை சருமத்தை வறட்சி இன்றி வைக்க உதவுகிறது. சருமத்தை மென்மையாக்க உதவுகிறது. தொடர்ந்து 15 நாட்கள் வரை கிரீன் டீ சாறை முகத்தில் தடவி வந்தால் வறட்சியான முகமும் ஈரப்பதம் கொண்டு மென்மையாக மாறும். இது ஆய்வு ஒன்றிலும் நிரூபணம் ஆகியுள்ளது. அதோடு சருமத்தின் கடினமான தன்மையையும் இது போக்க செய்கிறது.

கூடுதலாக இவை முகத்தில் உண்டாகும் தோல் சிவப்பு, அழற்சி வீக்கம், எரிச்சல் போன்றவற்றையும் குறைக்க உதவுகிறது. கிரீன் டீயை சருமத்தில் பயன்படுத்துவதன் மூலம் முகத்தின் எரிச்சலும் தணிக்கப்படுகிறது.

கிரீன் டீசிறந்த நச்சுநீக்கி. இவை முகத்தில் தேங்கியிருக்கும் பழைய செல்களை அகற்றி சருமத்துக்கு உயிரூட்டம் தருகிறது. இறந்த செல்களை அகற்றி சருமத்தில் இருக்கும் எண்ணெய்பசை மாசுவையும் நீக்கி சருமத்தை சுத்தம் செய்கிறது. இதனால் சருமம் புதுப்பிக்கப்பட்டு முகம் பொலிவடைகிறது.

சர்க்கரையுடன் கிரீன் டீ, ஆலிவ் எண்ணெய் கலந்து ஸ்க்ரப் செய்வதன் மூலம் மிகச்சிறந்த முடிவை பெறக்கூடும். முகத்துக்கு மட்டுமல்ல உடலுக்கும் இப்படி ஸ்க்ரப் செய்வதன் மூலம் உடல் முழுக்க பொலிவு பெறமுடியும். குறைந்தது மாதம் இருமுறையாவது இப்படி செய்துவரலாம்.

கிரீன் டீயில் இருக்கும் ஆன் டி ஆக்ஸிடன்ர்கள் உடலை இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது இந்த பலனை முழுமையாக பெறுவதற்கு முகத்துக்கு செய்ய வேண்டிய பராமரிப்புகளை குறித்த நேரத்தில் செய்வதும் அவசியம்.

முகத்தில் நெற்றியில் சுருக்க கோடுகள், வயதான தோற்றத்துக்கான அறிகுறிகள் தெரியும் போதே கிரீன் டீபராமரிப்புக்கு மாறிவிட வேண்டும். முகத்தில் தேங்கியிருக்கும் பழைய செல்களும், தூசிகளும் தான் சருமத்தின் வயதை வேகமாக அதிகரிக்க வழி செய்யும். இந்த நேரத்தில் பராமரிப்பு இல்லாத போது இதனால் இளவயதிலேயே சருமத்தின் தோற்றம் வயதானது போல் மாறிவிடகூடும் வாய்ப்பும் உண்டு.

கிரீன் டீ பயன்படுத்தும் போது சருமத்தில் இருக்கும் தேவையற்ற ஆக்ஸிஜனேற்றிகளை அகற்ற உதவுவதோடு ஃப்ரீ ரேடிக்கல்ஸையும் எதிர்த்து போராடுகிறது. அப்போது இதில் இருக்கும் பாலிபினால்கள் வயதான அறிகுறியை தடுத்து நிறுத்தி சருமத்தை இளமையாக வைக்க உதவுகிறது. பழைய செல்களை நீக்கி செல்களை புதுப்பித்து நச்சை நீக்குவதால் முன்பை காட்டிலும் முகத்தில் இளமையும் ஆரோக்கியமும் அதிகரித்துவிடுகிறது.
Tags:    

Similar News