லைஃப்ஸ்டைல்
முடி கொட்டும் பிரச்சனைக்கு தீர்வு தரும் வேப்பிலை ஹேர்பேக்

முடி கொட்டும் பிரச்சனைக்கு தீர்வு தரும் வேப்பிலை ஹேர்பேக்

Published On 2020-09-09 07:03 GMT   |   Update On 2020-09-09 07:03 GMT
வேப்பிலையானது அதிக அளவில் கசக்கும் தன்மை கொண்டதாக உள்ளது, இந்த வேப்பிலையை ஹேர்பேக்காக நாம் தலைமுடியில் அப்ளை செய்யும் பட்சத்தில் தலையில் உள்ள பொடுகு, அழுக்கு என அனைத்தையும் நீக்கி தலைமுடி உதிர்வைக் கட்டுக்குள் கொண்டுவரும்.
வேப்பிலையானது அதிக அளவில் கசக்கும் தன்மை கொண்டதாக உள்ளது, இந்த வேப்பிலையை ஹேர்பேக்காக நாம் தலைமுடியில் அப்ளை செய்யும் பட்சத்தில் தலையில் உள்ள பொடுகு, அழுக்கு என அனைத்தையும் நீக்கி தலைமுடி உதிர்வைக் கட்டுக்குள் கொண்டுவரும். வேப்பிலைகளை கொதிக்கும் நீரில் போட்டு அது ஆறியதும், அதனை கொண்டு தலைமுடியை அலசவும். இதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பு சக்தி கூந்தலில் உள்ள பேன்கள், பொடுகு, உச்சந்தலை காய்ந்து போதல், முடியுதிர்தல் மற்றும் வறண்ட கூந்தல் ஆகிய பிரச்சினைகள் குணமாகும். அது உங்களது கூந்தலை மென்மையாக்கி பளபளப்பாக்கும்.

தேவையானவை

வேப்பிலை - கைப்பிடியளவு
தேங்காய் எண்ணெய் – 30 மில்லி
விளக்கெண்ணெய் – 20 மில்லி
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்

செய்முறை:

தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெயினை நன்கு சூடாக்கிக் கொள்ளவும். அடுத்து இந்த எண்ணெயில் வேப்பிலையைப் போட்டு 24 மணி நேரம் ஊறவிடவும். அடுத்து அதனுடன் எலுமிச்சை சாறினை சேர்த்துப் பயன்படுத்தவும். இந்த எண்ணெயினை வாரத்தில் 2 முறை என்ற அளவில் அப்ளை செய்து, சீயக்காய் கொண்டு முடியினை அலசிவிடவும், அவ்வாறு செய்து வந்தால், முடி கொட்டும் பிரச்சினை காணாமல் போய்விடும்.

* வேப்பிலையை நன்கு பேஸ்ட் போல் அரைத்து, அதில் சிறிது தேன் கலந்து, தலைக்கு தடவி, ஷாம்பு போட்டு குளித்தால், பொடுகு நீங்கி, கூந்தல் பட்டுப் போன்று  மின்னும். இந்த முறை ஹேர் கண்டிஷனர் போன்றது.
Tags:    

Similar News