லைஃப்ஸ்டைல்
ரோஸ் பேஸ் பேக்

ரோஸ் பேஸ் பேக் போடுங்க... உங்க முகம் ஜொலிப்பதை பாருங்க...

Published On 2020-07-04 06:43 GMT   |   Update On 2020-07-04 06:43 GMT
ரோஜாப்பூக்களை வைத்து பேஸ் பேக் போட்டால், முகம் நன்கு பொலிவோடு, அழகான ரோஜாப்பூ நிறத்தில் மின்னும். இப்போது ரோஜாப்பூக்களை வைத்து எப்படியெல்லாம் பேஸ் பேக் போடலாம் என்று பார்ப்போமா!!!
ரோஜாப்பூக்களை வீணடிக்காமல், அவற்றை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால், அதனை வைத்து முகத்திற்கு ஃபேஸ் பேக் போடலாம்.  இவ்வாறு ரோஜாப்பூக்களை வைத்து ஃபேஸ் பேக் போட்டால், முகம் நன்கு பொலிவோடு, அழகான ரோஜாப்பூ நிறத்தில் மின்னும். இப்போது ரோஜாப்பூக்களை வைத்து எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம் என்று பார்ப்போமா!!!

ரோஜாப்பூக்களின் இதழ்களை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்து, பின் அதனை அரைத்து பேஸ்ட் போல் செய்து, சிறிது தயிர், எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் எண்ணெய் பசை மற்றும் வறட்சியான சருமத்திற்கு சிறந்தது.

ரோஜாவின் இதழ்களை நீரில் 30 நிமிடம் ஊற வைத்து, பின் அதனை எடுத்து, ஓரளவு அரைத்து, அத்துடன் ஓட்ஸை பொடி செய்து போட்டு, முகத்திற்கு தடவி ஸ்கரப் செய்ய வேண்டும். முக்கியம், இந்த ஃபேஸ் பேக் அல்லது ஸ்கரப் செய்யும் முன், முகத்தை நீரில் கழுவி, பின் பாலில் ஒருமுறை கழுவி, ரோஸ் வாட்டர் வைத்து துடைத்து, பின் முகத்திற்கு இந்த பேக் போட்டு, காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

ரோஜா இதழ்களை அரைத்து, அதில் கடலை மாவு மற்றும் தயிர் சேர்த்து கலந்து, சிறிது ரோஸ் வாட்டர் ஊற்றி, கெட்டியான பேஸ்ட் போன்று செய்து, முகத்தில் தடவி, காய வைத்து, பின் பாலால் கழுவி, இறுதியில் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.இதனால் முகம் நன்கு மென்மையாகவும், அழகாகவும் காணப்படும்.

பருக்கள் மற்றும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு இந்த ஃபேஸ் பேக் சரியானதாக இருக்கும். இந்த ஃபேஸ் பேக்கிற்கு ரோஜாவின் இதழ்களை அரைத்து, சந்தனப் பொடி சேர்த்து கலந்து, ரோஸ் வாட்டர் மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் பருக்கள், கரும்புள்ளிகள், பிம்பின், அதிகப்படியான எண்ணெய் பசை போன்றவை நீங்கிவிடும்.

ரோஜாவை அரைத்து, சந்தனப் பொடியுடன் சேர்த்து கலந்து, ரோஸ் வாட்டர் மற்றும் மஞ்சள் தூள் சிறிது சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பாலால் முகத்தில் கழுவி, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறெல்லாம் செய்து வந்தால், முகம் நன்கு பொலிவோடு, அழகாக மின்னும்.
Tags:    

Similar News