லைஃப்ஸ்டைல்

உதட்டின் அழகிற்கு கவனத்தில் கொள்ள வேண்டியவை

Published On 2018-11-20 04:48 GMT   |   Update On 2018-11-20 05:53 GMT
பெண்களின் முகத்திற்கு அழகு சேர்க்கும் உதட்டை மிக கவனமாக பாதுகாத்தால் வெடிப்புகள் ஏற்படாமலும், மென்மையாகவும், அழகாகவும் காட்சி தரலாம்.
பெண்களின் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் உதடுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. அதனை மிக கவனமாக பாதுகாத்தால் வெடிப்புகள் ஏற்படாமலும், மென்மையாகவும், அழகாகவும் காட்சி தரலாம்.

* உதடுகள் மென்மையாக இருக்க, வெண்ணெயை லேசாகப் பூசி வரலாம்.

* சந்தனத்தை பன்னீரில் குழைத்து உதடுகளில் பூசி, ஊற வைத்து, கழுவி வந்தால் உதடுகள் மென்மையாகும்.

* ரோஜா இதழ்களை பால் விட்டு அரைத்து உதடுகளில் பூசி வந்தால் உதடுகளில் ஏற்படும் வெடிப்புகள் மறையும்.

* பாலாடையை உதடுகளில் தினமும் பூசி வந்தால் வெடிப்பு மறைந்து அழகாக மாறும்.

* வெண்ணெயுடன் தேங்காய் எண்ணெயைக் கலந்து உதடுகளில் தடவி வந்தால் உதடுகள் காய்ந்து போகாமல் இருக்கும்.

* பீட்ரூட்டை துண்டுகளாக்கி அதை உதடுகளின் மேல் லேசாக தேய்த்து வந்தால் உதடுகள் ரோஜா கலரில் மாற்றம் ஏற்படும்.

* பன்னீரை பஞ்சினால் எடுத்து உதடுகளில் தினமும் பூசி வந்தால் உதடுகள் பொலிவாக மாறி விடும்.

* கொத்தமல்லித்தழையின் சாறை உதடுகளில் இரவு நேரத்தில் பூசி வந்தால் உதடுகள் சிவப்பாக மாறி அழகு தரும்.
Tags:    

Similar News