லைஃப்ஸ்டைல்

கூந்தல் வறட்சியை போக்கி பளபளப்பாக்கும் இயற்கை வழிகள்

Published On 2018-06-28 05:03 GMT   |   Update On 2018-06-28 05:03 GMT
கூந்தலில் வியர்வையினால் ஏற்படும் பிசுபிசுப்புத் தன்மை மற்றும் வறட்சியை போக்க இயற்கை வழிமுறைகளை பயன்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம்.
கூந்தலில் வியர்வையினால் ஏற்படும் பிசுபிசுப்புத் தன்மை மற்றும் அதனுடன் சேரும் அழுக்குகள், அப்படியே உச்சந்தலையில் தங்கி பொடுகு, அரிப்பை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க, இரண்டு நாள்களுக்கு ஒருமுறை துளசி, கறிவேப்பிலையைச் சம அளவில் எடுத்து அரைத்து ஒரு டீஸ்பூன் எலுமிச்சைப்பழச் சாற்றுடன் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் ஊறவைத்துக் குளிக்கவும்.

முடி உதிர்வு, வலுவிழந்த கூந்தல், நுனி முடிப்பிளவு,  கூந்தல் நிறமாற்றம் (செம்பட்டை) போன்ற பிரச்னைகளைத் தவிர்க்க, தலைக்குக் குளித்த பிறகு, கடைசியாக மூன்று டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகருடன் கால் கப் தண்ணீர் சேர்த்துக் கூந்தலை அலசவும்.

ஆலிவ் ஆயில், பாதாம் ஆயில், கடுகு எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றைச் சம அளவில் எடுத்துக் கலந்து, லேசாகச் சூடுபடுத்தி, தலையில் தேய்த்து மசாஜ் செய்து, எட்டு மணிநேரம் கழித்துக் கூந்தலை அலசினால், கூந்தல் உறுதியாகி, பளபளப்புடன் இருக்கும்.

ஆலிவ் ஆயில், வைட்டமின் ஈ ஆயில், தயிர் ஆகியவற்றைச் சம அளவில் கலந்து ஹேர் பேக் போட்டு, அரை மணி நேரத்துக்குப் பிறகு கூந்தலை அலச, வறட்சி நீங்கும்.
Tags:    

Similar News