லைஃப்ஸ்டைல்

குழந்தைகளுக்கு விருப்பமான வாழைக்காய் - பன்னீர் கபாப்

Published On 2018-12-17 06:43 GMT   |   Update On 2018-12-17 06:43 GMT
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கபாப் வகைகளை வீட்டிலேயே தயார் செய்து ருசிக்கலாம். பன்னீர் கபாப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

பன்னீர் துருவல் - அரை கப்
வாழைக்காய் - 1
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - 1 துண்டு (நறுக்கவும்)
பொட்டுக்கடலை மாவு - கால் கப்
உப்பு - தேவைக்கு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
எண்ணெய் - தேவைக்கு



செய்முறை:

வாழைக்காயை நன்றாக வேகவைத்து மசித்துக்கொள்ளவும்.

இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மசித்த வாழைக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பன்னீர், மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி தழை, பொட்டுக்கடலை மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்த கலவையை விரும்பிய வடிவங்களில் பிடித்து கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

ருசியான பன்னீர் கபாப் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News