லைஃப்ஸ்டைல்

சூப்பரான ஸ்நாக்ஸ் மிளகுத் தட்டை

Published On 2018-11-27 08:47 GMT   |   Update On 2018-11-27 08:47 GMT
மாலையில் டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் மிளகுத்தட்டை. இன்று இந்த தட்டையை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பச்சரிசி - 2 கப்
உளுந்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
மிளகு - அரை டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு
பொட்டு கடலை மாவு - கால் கப்
கடலை பருப்பு - கால் கப்



செய்முறை :

மிளகை இரவில் தண்ணீரில் ஊறவைத்துக்கொள்ள வேண்டும்.

கடலை பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்துக்கொள்ள வேண்டும்.

உளுந்தம் பருப்பை பொன்னிறமாக வறுத்துக்கொள்ள வேண்டும்.

பச்சரிசியை சிறிது நேரம் ஊறவைத்து அதனுடன் உளுந்தம் பருப்பை சேர்த்து மாவாக்க வேண்டும்.

அதனுடன் வெண்ணெய், கடலைப்பருப்பு, பொட்டுக்கடலை மாவு, மிளகு, உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்னர் தட்டைகளாக தட்டி கொதிக்கும் எண்ணெய்யில் பொரித்தெடுக்கவும்.

சூப்பரான ஸ்நாக்ஸ் மிளகு தட்டை ரெடி.

இதை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்தால் 1 வாரம் வரை நன்றாக இருக்கும்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News