லைஃப்ஸ்டைல்

டெவில் சிக்கன் செய்வது எப்படி?

Published On 2018-08-27 06:53 GMT   |   Update On 2018-08-27 06:53 GMT
குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சிக்கனை வைத்து வித்தியாசமான டெவில் சிக்கன் ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சிக்கன் - 200 கிராம்
பஜ்ஜி மிளகாய் - 2 (மீடியம் சைஸ் துண்டுகள்)
குடை மிளகாய் - 1 (மீடியம் சைஸ் துண்டுகள்)
இஞ்சி-பூண்டு விழுது - 5 கிராம்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி சாஸ் - 50 கிராம்
இடித்த மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - 10 கிராம்
முட்டை - 1
மைதா மாவு - 50 கிராம்
கார்ன்ஃப்ளார் - 100 கிராம்
வெங்காயத்தாள் - 10 கிராம்
தக்காளி - 1
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு



செய்முறை :

பெரிய வெங்காயத்தை பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

வெங்காயத்தாள், தக்காளியை பெடியாக நறுக்கி கொள்ளவும்.

முட்டையை நன்றாக அடித்து வைக்கவும்.

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

சிக்கன் துண்டுகளைக் கழுவி, மைதா, கார்ன்ஃப்ளார், உப்பு, உடைத்த முட்டை, இஞ்சி, பூண்டு விழுது, சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து, 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கனை போட்டு மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும்.

இன்னொரு வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய இஞ்சி, பூண்டு, பெரிய வெங்காயம், குடைமிளகாய், பஜ்ஜி மிளகாய் போட்டு வதக்கவும்.

இதில் சிறிது தண்ணீர் சேர்த்து தக்காளி சாஸ், இடித்த மிளகாய்த்தூள், உப்பு, சர்க்கரை, வெள்ளை மிளகுத்தூள் சேர்க்கவும்.

இத்துடன் கடைசியாக பொரித்த சிக்கன், தக்காளி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் ஆகியவற்றைச் சேர்த்து இறக்கவும்.

சூப்பரான டெவில் சிக்கன் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News