லைஃப்ஸ்டைல்

எண்ணெய் சேர்க்காத ஸ்டீம்டு சங்கரா மீன்

Published On 2018-07-20 06:05 GMT   |   Update On 2018-07-20 06:05 GMT
எண்ணெய் சேர்க்காத ஸ்டீம்டு சங்கரா மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருப்பதால், இதய நோய், கொலஸ்ட்ரால் பிரச்சனை வராது. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சங்கரா மீன் - 250 கிராம்,
பெரிய வெங்காயம் - 50 கிராம்,  
சிகப்பு மிளகாய் - 10 கிராம்,
இஞ்சி - 20 கிராம்,
பூண்டு - 5 கிராம்,
கொத்தமல்லித் தழை - 15 கிராம்,
சோயா சாஸ் - 5 மி.லி,
உப்பு - ஒரு கிராம்,  
வெள்ளை மிளகுத்தூள் - 2 கிராம்,  
தண்ணீர் - 50 மி. லி.



செய்முறை :

வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சங்கரா மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சோயா சாஸ், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

சங்கரா மீனின் மேல் உள்ள தோலை அகற்றி விட்டு சோயா சாஸ், உப்பு, மிளகுத்தூள் கலந்த கலவையை மீனின் மேல் தடவி ஒரு தட்டில் வைத்து விடவும்.

நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டை நன்றாக சேர்த்துக் கலக்கி மீனின் மேல் வைத்து, சிறிதளவு நீர் விடவும்.

இந்த தட்டை நீராவியில் வேகவைத்து எடுத்து, கொத்தமல்லி, சிகப்பு மிளகாய் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஸ்டீம்டு சங்கரா மீன் (எண்ணெய் சேர்க்காதது) ரெடி.

குறிப்பு : எந்த மீனில் வேண்டுமானாலும் இதை செய்யலாம்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Tags:    

Similar News