லைஃப்ஸ்டைல்

சூப்பரான வெண்டைக்காய் பொரியல்

Published On 2018-07-02 05:40 GMT   |   Update On 2018-07-02 05:40 GMT
உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் ஏராளமான சத்துகள் வெண்டைக்காயில் அடங்கியுள்ளன. இன்று சுவையான வெண்டைக்காய் பொரியல் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

வெண்டைக்காய் - 1/4 கிலோ,
வெங்காயம் - 1,
பச்சை மிளகாய் - 2,
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்,
கடுகு - 1/4 டீஸ்பூன்,
உளுந்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்,
வரமிளகாய் - 1,
பூண்டு - 2 பல்,
தேங்காய் துருவியது - 3 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு



செய்முறை

முதலில் வெண்டைக்காயை நன்கு கழுவி, அதனை ஒரு துணியால் துடைத்து விட்டு, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் பூண்டு போட்டு தாளிக்க வேண்டும்.

பின்பு அதில் மிளகாய் மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

வெங்காயம் பொன்னிறமானதும், அதில் நறுக்கிய வெண்டைக்காய் போட்டு கிளறி, வெண்டைக்காய் வேகும் வரை அடுப்பில் வைத்து கிளற வேண்டும்.

வெண்டைக்காய் வெந்ததும், அதில் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

இறுதியில் அத்துடன் துருவி வைத்துள்ள தேங்காய் போட்டு கிளறி இறக்கி விட வேண்டும்.

சூப்பரான வெண்டைக்காய் பொரியல் ரெடி!!!

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News