லைஃப்ஸ்டைல்

மாம்பழ மோர்க்குழம்பு செய்வது எப்படி

Published On 2018-05-29 06:35 GMT   |   Update On 2018-05-29 06:35 GMT
இந்த சீசனில் கிடைக்கும் மாம்பழத்தை வைத்து பல்வேறு சுவையான உணவுகளை செய்யலாம். இன்று மாம்பழத்தை வைத்து மோர்க்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

புளிப்பும் தித்திப்புமான சிறு மாம்பழங்கள் - 2,
புளித்த மோர் - 2 கப்,
அரிசி - ஒரு டீஸ்பூன்,
சீரகம், கடுகு - தலா அரை டீஸ்பூன்,
வெந்தயம் - கால் டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - ஒன்று,
காய்ந்த மிளகாய் - 2,
தேங்காய் துருவல் - ஒரு கப்,
தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
உப்பு - தேவையான அளவு.



செய்முறை:

மாம்பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

வாணலியில் ஒரு கப் தண்ணீர் விட்டு மாம்பழங்களை வெட்டிப் போட்டு சிறிது உப்பு சேர்த்து வேக விடவும்.

மிக்சியில் தேங்காய் துருவல், அரிசி, சீரகம், ஒரு காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

அரைத்ததை மோரில் கலந்து, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து வெந்து கொண்டுஇருக்கும் மாம்பழங்களுடன் கலக்கவும் (தேவையானால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்).

மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானமும் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், ஒரு காய்ந்த மிளகாய் தாளித்து சேர்க்கவும்.

குழம்பு பொங்கி வரும்போது கீழே இறக்கி, கறிவேப்பிலை சேர்க்கவும்.

சூப்பரான மாம்பழ மோர்க்குழம்பு ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News