லைஃப்ஸ்டைல்

கேரளா ஸ்டைல் மத்தி மீன் குழம்பு

Published On 2017-01-28 05:35 GMT   |   Update On 2017-01-28 05:35 GMT
கேரளாவில் மத்தி மீன் குழம்பு மிகவும் பிரபலம். இன்று சூப்பரான கேரளா ஸ்டைல் மத்தி மீன் குழம்பை எப்படி எளிய முறையில் செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :

மத்தி மீன் - 1/2 கிலோ
கறிமசாலா - 1
வெங்காயம் - 2
தக்காளி - 3
பச்சை மிளகாய் -2
மிளகாய் தூள் -2 ஸ்பூன்
மல்லி தூள் -1  ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1  ஸ்பூன்
சோம்பு -1 1 /2 ஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
தேங்காய் - 1 /2 மூடி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

* மத்தி மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

* தேங்காயுடன், சோம்பு சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

* புளியை நன்றாக கரைத்து கொள்ளவும்.

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிமசாலா போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் எல்லா மசாலாக்களையும் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

* அடுத்து அதில் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.

* குழம்பு நன்கு கொதித்ததும் மீன் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

* அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து பச்சை வாசனை போனவும் இறக்கவும்.

* சூப்பரான கேரளா ஸ்டைல் மத்தி மீன் குழம்பு ரெடி. 

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News