லைஃப்ஸ்டைல்

குழந்தைகளுக்கு விருப்பமான கோகோ கேக்

Published On 2016-11-25 09:01 GMT   |   Update On 2016-11-25 09:01 GMT
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இந்த கோகோ கேக்கை எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கோவா (இனிப்பு இல்லாதது) - 2 கப்,
மைதா - ஒரு கப்,
கோகோ பவுடர் - 5 டீஸ்பூன்,
சர்க்கரை - 4 கப்,
நெய் - சிறிதளவு.

செய்முறை :

* அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் கோவா, 2 கப் சர்க்கரை, மைதா ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கைவிடாமல் கிளறி, சுருண்டு வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பவும்.

* மற்றொரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து மீதமிருக்கும் கோவா மற்றும் சர்க்கரை, கோகோ பவுடர் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கைவிடாமல் கிளறி, சுருண்டு வரும்போது இறக்கி, ஏற்கெனவே தட்டில் கொட்டிய கலவை மீது கொட்டி சமமாக பரப்பவும்.

* நன்றாக ஆறிய பின் துண்டுகள் போடவும்.

* கோகோ கேக் ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News