லைஃப்ஸ்டைல்

மதுரை மட்டன் சுக்கா

Published On 2016-04-30 05:24 GMT   |   Update On 2016-04-30 05:24 GMT
விடுமுறை நாட்களில் மட்டனை விதவிதமாக சமைத்து பொறுமையாக உட்கார்ந்து சாப்பிட்டால் எவ்வளவு சூப்பராக இருக்கும். அதிலும் மட்டன் சுக்கா செய்து ரசம் சாதத்துடன் சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :

மட்டன் - 200 கிராம்
சின்ன வெங்காயம் - 2 சிறியது
பூண்டு - 10 பற்கள்
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தனியா தூள் - 1/2 டீஸ்பூன்
கெட்டியான தேங்காய் பால் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு :

சோம்பு - 1/2 டீஸ்பூன்
பட்டை - 1/4 இன்ச்
கிராம்பு - 2
பிரியாணி இலை - 1
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 2 டீஸ்பூன்


செய்முறை :

* முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* குக்கரை அடுப்பில் வைத்து, அதில் மட்டன் துண்டுகளைப் போட்டு, மஞ்சள் தூள், 1/4 டீஸ்பூன், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை கிளறி விட வேண்டும்.

* பின்பு அதில் சிறிது தண்ணீரை ஊற்றி, மிதமான தீயில் 8 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* பின் அதில் தக்காளி சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்கி, பின் மீதமுள்ள மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து கிளறி, வேக வைத்துள்ள மட்டனை நீருடன் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* மட்டனில் உள்ள தண்ணீர் வற்றியதும், அதில் தேங்காய் பால் சேர்த்து, தேங்காய் பாலும் வற்றும் வரை நன்கு கிளறி இறக்கினால், மதுரை மட்டன் சுக்கா ரெடி!!!

Similar News