சமையல்

சூப்பரான ஸ்நாக்ஸ் சோயா லாலிபாப்

Update: 2022-08-13 08:03 GMT
  • சோயாவில் பல்வேறு வகையான ரெசிபிகளை செய்யலாம்.
  • இன்று சோயா லாலிபாப் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

மீல்மேக்கர் - கால் கப்

உருளைக்கிழங்கு - 1

ப.பட்டாணி - ஒரு கைப்பிடி

பெ.வெங்காயம் - 1

கேரட் - 1

குடை மிளகாய் - 1

உப்பு - தேவைக்கு

மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

ஐஸ் குச்சிகள் - 5

செய்முறை :

வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கேரட் துருவிக்கொள்ளவும்.

உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.

அகன்ற பாத்திரத்தில் நீரை கொதிக்கவைத்து அதில் சோயாவை போட்டு கால் மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறியதும் தண்ணீரை அப்புறப்படுத்திவிட்டு மிக்சியில் லேசாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் குடை மிளகாய், கேரட், பட்டாணியை கொட்டி வதக்கவும்.

அவை நன்கு வதங்கியதும் சோயாவை போட்டு கிளறி இறக்கவும்.

நன்கு ஆறியதும் சோயா கலவையுடன் மசித்த உருளைக்கிழங்கு, மிளகு தூள் கலந்து உருண்டைகளாக தயார் செய்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் உருண்டைகளை போட்டு பொரித் தெடுக்கவும்.

பின்னர் உருண்டைகளின் நடுவில் ஐஸ் குச்சிகளை சொருகினால் சோயா லாலிபாப் ரெடி.

Tags:    

Similar News