சமையல்

சூப்பரான ஸ்நாக்ஸ் சொஜ்ஜி அப்பம்

Published On 2023-06-18 09:35 GMT   |   Update On 2023-06-18 09:35 GMT
  • குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் மிகவும் பிடிக்கும்.
  • சொஜ்ஜி அப்பம் என்பது பூரி போன்ற இனிப்பு உணவு.

தேவையான பொருட்கள்

ரவை - 1 கப்

மைதா - 1 கப்

துருவிய தேங்காய் - 1 கப்

சர்க்கரை - ஒன்றரை கப்

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

உப்பு - சிட்டிகை

நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை

வெறும் வாணலியில் ரவையை லேசான தீயில் வறுத்தெடுத்துக்கொள்ளுங்கள்.

மற்றொரு பாத்திரத்தில் மைதா, உப்பு, நெய் மற்றும் தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்துக்குப் பிசைந்து இரண்டு மணிநேரம் ஊறவிடுங்கள்.

இப்போது வறுத்த ரவையுடன் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து ரவையை வேகவிடுங்கள்.

ரவை வெந்ததும் துருவிய தேங்காய், சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கிவைத்துவிடுங்கள். ரவை ஆறியதும் எலுமிச்சைப் பழ அளவு உருண்டைகளை உருட்டிக்கொள்ளுங்கள்.

இப்போது பிசைந்து வைத்துள்ள மைதா மாவைச் சிறு உருண்டைகளாகத் திரட்டி அதன் நடுவில் ரவை பூரணத்தை வைத்து மூடி மீண்டும் பூரியாகத் திரட்டுங்கள்.

வாணலியில் எண்ணெய் சூடானதும் திரட்டிவைத்துள்ள சொஜ்ஜி அப்பத்தை போட்டு பொரித்தெடுத்துப் பரிமாறுங்கள்.

இப்போது சூப்பரான ஸ்நாக்ஸ் சொஜ்ஜி அப்பம் ரெடி.

ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

Tags:    

Similar News