சமையல்

இனிப்புப் பிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் 'ஷாய் துக்கடா'

Published On 2022-08-03 08:56 GMT   |   Update On 2022-08-03 08:56 GMT
  • 'ஷாய் துக்கடா' முகலாய மன்னர்களின் விருப்பமான இனிப்பு வகையாகும்.
  • ஐதராபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த இனிப்பு பிரபலம்.
  • இந்த இனிப்பு ரம்ஜான், ஹோலி, தீபாவளி நாட்களில் சுவைக்கப்படுகிறது.

தேவையான பொருட்கள்:

பால் - 1 லிட்டர்

சர்க்கரை - 150 கிராம்

ஏலக்காய் பொடி - 2 ஸ்பூன்

ரொட்டித் துண்டுகள் - 6

நெய் - தேவைக்கேற்ப

பொடித்த பாதாம், முந்திரி, பிஸ்தா, திராட்சை தண்ணீர் - தேவையான அளவு

குங்குமப்பூ - 2 சிட்டிகை

செய்முறை:

ரொட்டித் துண்டுகளின் ஓரங்களை நீக்கி முக்கோண வடிவில் வெட்டிக்கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, மிதமான தீயில் நன்றாக சூடுபடுத்தவும்.

சிறிய கிண்ணத்தில் சிறிது பாலை ஊற்றி, அதில் குங்குமப்பூவைப் போட்டு ஊற வைக்கவும்.

அடுப்பில் இருக்கும் பால் பாதி அளவாக சுண்டியதும், அதில் குங்குமப்பூ கலந்த பாலை ஊற்றிக் கலக்கவும்.

பின்பு அதில் நெய்யில் வறுத்த பாதாம் பிஸ்தா, முந்திரி மற்றும் திராட்சை சேர்த்துக் கிளறவும்.

மற்றொரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து நன்றாகக் கொதிக்க வைக்கவும்.

வெட்டப்பட்ட ரொட்டித் துண்டுகளை நெய்யில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

பின்பு அவற்றை கொதிக்க வைத்த சர்க்கரை நீரில் நன்றாக தோய்த்து எடுக்கவும்.

ஒரு தட்டில் பால் கலவையை ஊற்றி, அதன் மீது ரொட்டித் துண்டுகளை வைத்து, அவற்றின் மீது மீண்டும் பால் கலவையை ஊற்றவும்.

அதன் மேல் நெய்யில் வறுத்த பாதாம், முந்திரி, பிஸ்தா மற்றும் திராட்சை தூவி பரிமாறவும்.

ஷாய் துக்கடாவை சூடாகவும், குளிர்ச்சிபடுத்தியும் சாப்பிடலாம்.

Tags:    

Similar News