சமையல்

சாமை வெஜிடபிள் பிரியாணி

Update: 2022-09-25 07:21 GMT
  • சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
  • சிறுதானியங்களில் பல்வேறு ருசியான உணவுகளை செய்யலாம்.

தேவையான பொருட்கள்

சாமை அரிசி - 500 கிராம்,

வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், சௌசௌ - தலா 100 கிராம்,

பச்சைப்பட்டாணி - 50 கிராம்,

தயிர் -அரை கோப்பை,

இஞ்சி, பூண்டு விழுது, புதினா -தேவையான அளவு,

சோம்பு, பட்டைப்பொடி - 2 மேசைக்கரண்டி,

மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:

நெய் -100 மி.கி,

ஏலக்காய், பிரிஞ்சி இலை, கிராம்பு - தலா 2,

பட்டை, சாதிபத்திரி - சிறிதளவு.

செய்முறை

சாமை அரிசி நன்றாக கழுவி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

வெங்காயம், தக்காளி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அடுப்பில் வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து அதில் நெய்யைச் சூடானதும், தாளிக்கக் கொடுத்த பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் புதினாவை சேர்க்கவும்.

புதினா நன்றாக வதங்கியதும், தக்காளி சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும்.

தக்காளி குழைய வதங்கியதும் காய்கறிகள், பச்சைப்பட்டாணி சேர்த்து மிளகாய்த்தூள், உப்புடன் ஒரு லிட்டர் (5 டம்ளர்) தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

நன்கு கொதி வந்ததும் தயிர் சேர்த்து கொதிக்கவிடவும்.

பின் சாமை அரிசியைச் சேர்த்து நன்கு கிளறவும்.

பின்பு 5 நிமிடம் தீயை மிதமாக வைத்து மூடி போட்டு வேகவிடவும்.

பிரியாணி பதம் வந்ததும் இறக்கி புதினா தூவி பரிமாறவும்.

சூப்பரான சாமை வெஜிடபிள் பிரியாணி ரெடி.

Tags:    

Similar News