சமையல்

வீட்டுல அரிசி மாவு இருக்கா... வாங்க வடை செய்யலாம்...

Update: 2023-06-04 09:36 GMT
  • உளுந்து வைத்து பல்வேறு வெரைட்டி வடைகளை செய்யலாம்.
  • இன்று அரிசி மாவில் வடை செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பச்சரிசி மாவு - 200 கிராம்,

தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,

பச்சை மிளகாய் - 4,

சீரகம் - அரை டீஸ்பூன்,

கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,

பெருங்காயத்தூள், உப்பு - சிறிதளவு.

செய்முறை:

கொத்தமல்லி, கறிவேப்பிலை, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

2 கப் நீரைக் கொதிக்கவிட்டு… அதில் உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் சேர்க்கவும்.

ஒரு நிமிடத்துக்குப் பிறகு கொத்தமல்லி, அரிசி மாவைத் தூவி கட்டியின்றி கிளறி, ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து மேலும் கிளறி இறக்கி ஆறவிடவும்.

இந்த மாவில் சிறிதளவு எடுத்து வடைகளாக தட்டி வைக்கவும்.

கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் விட்டு சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து தட்டி வைத்த வடைகளை சூடான எண்ணெயில் போட்டு பொரித் தெடுக்கவும்.

விரைவில் பொரிந்துவிடும் இந்த வடை.

இப்போது சூப்பரான அரிசி வடை ரெடி.

ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

Tags:    

Similar News