சமையல்

பருப்பு உருண்டை ரசம் செய்யலாமா?

Published On 2022-08-22 05:57 GMT   |   Update On 2022-08-22 05:57 GMT
  • ரசத்தில் பல்வேறு வெரைட்டிகள் உள்ளது.
  • இன்று பருப்பு உருண்டை சேர்த்து ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பருப்பு உருண்டை செய்ய

ஊறவைத்த துவரம் பருப்பு - முக்கால் கப்

காய்ந்த மிளகாய் - 5

பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

ரசம் வைக்க :

நெய் - 3 டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை - ஒரு கொத்து

பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்

புளி தண்ணீர் - 1 கப்

தக்காளி - 1

தனியா தூள் - 2 டீஸ்பூன்

சீரகப் தூள் - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

மிளகு தூள் - 1டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :

கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

முந்தைய நாள் இரவே துவரம் பருப்பை தண்ணீரில் ஊற வைத்துக்கொள்ளுங்கள். மிக்ஸியில் உருண்டைக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

இட்லி குக்கரில் நல்லெண்ணெய் தடவி பருப்பை உருண்டைகளாக உருட்டி அதில் வைத்து வேக வைத்து கொள்ளுங்கள்.

கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி கடுகு , சீரகம், கறிவேப்பிலை , காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்த தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி வதங்கிய பின்னர் புளித்தண்ணீர் சேர்க்கவும். அதோடு மஞ்சள், தனியா, சீரகம் , மிளகு தூள், உப்பு, 2 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்.

ரசம் கொதிக்க ஆரம்பிக்கும் போது அடுப்பை அணைத்துவிட்டு செய்து வைத்த உருண்டை, கொத்தமல்லி போட்டு இறக்கி அரை மணி நேரம் மூடிவைத்த பின்னர் பரிமாறவும்.

சூப்பரான பருப்பு உருண்டை ரசம் ரெடி.

Tags:    

Similar News