சமையல்

சத்தான சாமை டிலைட்

Published On 2023-09-29 08:22 GMT   |   Update On 2023-09-29 08:22 GMT
  • பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கட்டி மற்றும் மார்பக கட்டியை கரைகிறது.
  • சாமை அரிசி மலச்சிக்கலை போக்க வல்லது.

சாமை அரிசியில் இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் அதிகமாக உள்ளது, இது சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் கொண்டுவர முக்கிய பங்குவகிக்கிறது. சாமை அரிசி மலச்சிக்கலை போக்க வல்லது. சாமை அரிசி நமது உடல் வெப்பத்தை சமநிலைபடுத்துகிறது. பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கட்டி மற்றும் மார்பக கட்டியை கரைகிறது. மேலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் கொழுப்பு கட்டிகளையும் கரைக்கும் தன்மை சாமை அரிசிக்கு உள்ளது. இவ்வளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சாமை அரிசியை பயன்படுத்தி சாமை டிலைட் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

சாமை - 200 கிராம்

பால் - அரை கப்

கடைந்த தயிர் - ஒரு கப்

வெண்ணெய் - 2 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

உப்பு - தேவையான அளவு.

கடுகு மற்றும் பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

எண்ணெய் - 2 டீஸ்பூன்.

துருவிய மாங்காய், கேரட் மற்றும் வெள்ளரி - ஒரு டேபிள் ஸ்பூன்

நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் சாமை அரிசிடன் உப்பு, பெருங்காயத்தூள், பால் சேர்த்து வேக வைக்கவேண்டும். அதன்பிறகு வேகவைத்த சாமையை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஆறியதும் அதில் தயிர், வெண்ணெய் சேர்க்க வேண்டும். பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்தமிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அதனுடன் துருவிய மாங்காய், கேரட், வெள்ளரி மற்றும் கொத்தமல்லித்தழை தூவி எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து பரிமாறவும். சுவையான சாமை டிலைட் தயார்.

Tags:    

Similar News