சமையல்

இரும்புச்சத்து நிறைந்த பாசிப்பருப்பு தாளிச்ச இட்லி

Published On 2022-11-15 06:27 GMT   |   Update On 2022-11-15 06:27 GMT
  • பாசிப்பயிறு கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகளுக்கு ஏற்ற உணவாகும்.
  • உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் இந்த இட்லியை சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு - 1 கப்

எண்ணெய் - 1 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

பச்சை மிளகாய் - 3

பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி

துருவிய கேரட் - 1/4 கப்

கொத்தமல்லி - சிறிதளவு

இஞ்சி - 1 துண்டு

உப்பு - தேவையான அளவு

Eno - 1 தேக்கரண்டி

செய்முறை

ப.மிளகாய், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பாசிப்பருப்பு நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊற வைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பேனில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும், அரை தேக்கரண்டி கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்துக் வதக்கவும்.

அடுத்து அதனுடன் பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து மாவில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

அதனுடன் துருவிய கேரட், கொத்தமல்லி, இஞ்சி, தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.

பின்னர் ஒரு தேக்கரண்டி Eno மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

இட்லி தட்டில் எண்ணெய் தடவி தயார் செய்து வைத்துள்ள மாவில் இட்லி ஊற்றவும்.

இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து சூடானதும் இட்லி தட்டுகளை வைத்து மூடி வைக்கவும்.

மிதமான சூட்டில் 15 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

இப்போது சுவையான பாசிப்பருப்பு தாளிச்ச இட்லி தயார்.

தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் பரிமாறவும்.

Tags:    

Similar News