சமையல்

இன்று ருசியான மசாலா பொங்கல் செய்யலாமா?

Published On 2023-02-01 06:10 GMT   |   Update On 2023-02-01 06:10 GMT
  • பொங்கலை இன்று வித்தியாசமான முறையில் செய்யலாம்.
  • பொங்கல் பிடிக்காதவர்களும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்

அரிசி - 1 கப்

பாசிப்பருப்பு - அரை கப்

வெங்காயம் - 2

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 6

பட்டை, லவங்கம், கிராம்பு - சிறிதளவு

புதினா, கொத்தமல்லி - கைப்பிடி அளவு

இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

மஞ்சள்பொடி - 1 டீஸ்பூன்

நெய் - 2 கரண்டி

உப்பு - தேவையான அளவு

முந்திரிப்பருப்பு- சிறிதளவு

செய்முறை:

வெங்காயம், தக்காளியை லேசாக வதக்கி நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

அரிசி, பாசிப்பருப்பை நன்றாக கழுவி 1 மணி நேரம் ஊற வைத்த பின்னர் தண்ணீரை முழுவதுமாக வடித்து விட்டு நெய் விட்டு இரண்டையும் சற்று பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் பட்டை, லவங்கம், கிராம்பு போட்டு தாளித்த பின்னர் அரைத்த வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி, வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்க்கவும்.

இஞ்சி - பூண்டு பச்சை வாசனை போனவுடன் பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வேகவைக்கவும்.

அடுத்து ஒரு கப் அரிசிக்கு இரண்டு தண்ணீர் என்ற கணக்கில் தண்ணீர் விட்டு, அதில் வறுத்த அரிசி, பாசிப்பருப்பைபோட்டு தேவையான அளவு உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவைக்கவும்.

நன்றாக வெந்ததும் கடுகு, சீரகம், முந்திரிப்பருப்பு தாளித்துக் கொட்டவும்.

சுவையான மசாலாப் பொங்கல் தயார்.

இதற்கு தொட்டுக்கொள்ள புதினா துவையல், தக்காளித்தொக்கு, ஊறுகாய் சூப்பராக இருக்கும்.

Tags:    

Similar News