சமையல்

மைதா மாவு தோசை செய்யலாம் வாங்க..

Published On 2022-09-06 11:35 IST   |   Update On 2022-09-06 11:35:00 IST
  • மைதா மாவில் சூப்பராக தோசை செய்யலாம்.
  • இந்த தோசை செய்ய 10 நிமிடங்களே போதுமானது.

தேவையான பொருள்கள் :

மைதா மாவு - 1 கப்,

பச்சரிசி மாவு - முக்கால் கப்,

உப்பு - தேவையான அளவு,

சின்ன வெங்காயம் - 15,

பச்சை மிளகாய் - 2,

கொத்தமல்லித்தழை - சிறிதளவு,

கடுகு - அரை டீஸ்பூன்,

சீரகம் - கால் டீஸ்பூன்,

மிளகு - 10,

கறிவேப்பிலை - 1 ஆர்க்கு,

எண்ணெய் - (தோசை சுடுவதற்கும், தாளிப்பதற்கும்) தேவையான அளவு.

செய்முறை:

வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மிளகை கொரகொரப்பாக உடைத்துக்கொள்ளவும்.

மைதா, பச்சரிசி மாவு, உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து ரவா தோசைக்கு கரைப்பதுபோல் கரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, சீரகம், மிளகு போட்டு தாளித்து அதில் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி மாவில் கொட்டவும்.

அத்துடன் கொத்தமல்லித்தழை சேர்த்து கலக்கவும்.

சூடான தோசைக் கல்லில் மாவை எடுத்து அள்ளித் தெளித்த மாதிரி தோசையாக ஊற்றி எண்ணெய் விட்டு, ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிவிட்டு எண்ணெய் விட்டு நன்றாக மொறுமொறுப்பாக சிவக்க வெந்ததும் எடுக்கவும்.

வரமிளகாய் சட்னியுடன் இந்த தோசையை சாப்பிட்டால், சூப்பரோ சூப்பர்.

Tags:    

Similar News