சமையல்

கேரளா ஸ்பெஷல் சர்க்கரை வரட்டி

Published On 2022-10-07 06:03 GMT   |   Update On 2022-10-07 06:03 GMT
  • கேரளாவில் மிகவும் பிரபலம் சர்க்கரை உப்பேரி அல்லது சர்க்கரை வரட்டி.
  • கேரளாவில் அனைத்து பண்டிகை, திருமணங்களுக்கும் இது அவசியம்.

தேவையான பொருட்கள் :

பெரிய வாழைக்காய் - 4

வெல்லம் / வெல்லத்தூள் - 3/4 கப்

ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்

சுக்குத்தூள் - 1/4 டீஸ்பூன்

தேங்காய் எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

சீரகம் தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை :

வாழைக்காயைத் தோல் சீவி ஒரு சென்டிமீட்டர் கனத்திற்கு அரை வட்டங்களாக நறுக்கி, தட்டில் பரப்பி 10 நிமிடங்கள் உலர விடவும்.

வாணலியில் எண்ணெய் காய விட்டு வாழைக்காய்த் துண்டுகளைச் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, சத்தம் அடங்கும் வரை பொறுமையாக பொரித்தெடுக்கவும். எண்ணெயை வடித்துவிட்டு ஒரு பாத்திரத்தில் போடவும்.

வேறு ஒரு பாத்திரத்தில் வெல்லத்துடன் கால் கப் சூடான வெந்நீர் ஊற்றிக் கரைத்து வடிகட்டவும்.

பிறகு, வெல்லக் கரைசலைக் கொதிக்க வைத்து ஒரு கம்பிப் பதத்திற்குப் பாகு காய்ச்சி இறக்கவும்.

அதனுடன் ஏலக்காய்த்தூள், சுக்குத்தூள், சீரகத்தூள் சேர்த்து கலக்கவும் .

பிறகு வாழைக்காய் சிப்ஸுடன் சேர்த்துக் கலக்கவும்.

ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, பொடித்த சர்க்கரைத் தூவலாம்.

இப்போது சர்க்கரை வரட்டி ரெடி.

Tags:    

Similar News