சமையல்

சத்து நிறைந்த கம்பு தோசை

Published On 2022-08-15 06:55 GMT   |   Update On 2022-08-15 06:55 GMT
  • கம்பு தோசை ஆரோக்கியமான, அசத்தலான சுவையுடன் கூடிய அருமையான சிற்றுண்டி.
  • கம்பினை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தேவையான பொருட்கள்

கம்பு - 400 கிராம்

இட்லி அரிசி - 400 கிராம்

உளுந்தம் பருப்பு - 200 கிராம்

வெந்தயம் - 2 ஸ்பூன்

கல் உப்பு - தேவையான அளவு

செய்முறை

காய்ந்த கம்பினை முதலில் அலசி, சுமார் 5 மணி நேரம் ஊற வைக்கவும்.

கம்பு ஊற வைத்த இரண்டு மணி நேரம் கழித்து, இட்லி அரிசியை கழுவி, கம்புடன் சேர்த்து மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, ஊற வைக்கவும்.

உளுந்தம் பருப்பு, வெந்தயம் இரண்டையும் நன்கு அலசி சுமார் 1மணி நேரம் ஊற வைக்கவும்.

பின்னர் கம்பு மற்றும் உளுந்தம் பருப்பு ஆகியவற்றை ஊற வைத்த தண்ணீரைப் பயன்படுத்தி, கிரைண்டரில் முதலில் அரிசி மற்றும் கம்பினை நைசாக அரைத்து எடுக்கவும.,

பின்னர் உளுந்தம் பருப்பு, வெந்தயத்தை நைசாக தோசை மாவு பதத்தில் அரைத்து எடுக்கவும்.

தேவையான உப்பினை, கம்பு மற்றும் அரிசி மாவினை தோண்டுவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்னர் மாவில் சேர்த்து, ஒருசேர அரைத்ததும் தோண்டவும்.

பின்னர் இரண்டு மாவினையும் ஒருசேரக் கரைத்து, ஐந்து முதல் ஆறு மணி நேரம் புளிக்க வைத்துக் கொள்ளவும்.

தோசைக் கல்லில் புளித்த மாவினை மெல்லிய தோசைகளாக வார்த்து எடுக்கவும்.

லேசான பச்சைநிறத்தில் சுவையான கம்பு தோசை தயார்.

இதற்கு தொட்டுக் கொள்ள தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, சாம்பார் உள்ளிட்டவைகள் பொருத்தமாக இருக்கும்.

Tags:    

Similar News