சமையல்
null

சளி, இருமல் தொல்லை நீங்க துளசி சாதம்

Published On 2023-09-10 05:32 GMT   |   Update On 2023-09-10 09:34 GMT
  • துளசியை தீர்த்தமாகவும், பூஜை பொருட்களாக மட்டுமின்றி உணவாகவும் சாப்பிடலாம்.
  • துளசி சாதம் செய்து குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கும் கொடுக்கலாம்.

துளசியை தீர்த்தமாகவும், பூஜை பொருட்களாக மட்டுமின்றி உணவாகவும் சாப்பிடலாம். சளி, இருமல் தொல்லை நீங்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நாம் அவர்களுக்கு துளசி சாதம் செய்து கொடுக்கலாம். அதை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

தேவையானபொருட்கள்:

துளசி இலை-1/2 கப்

சாதம்-1 கப்

கடலை பருப்பு-1 ஸ்பூன்

உளுத்தம் பருப்பு-1 ஸ்பூன்

கடுகு- சிறிதளவு

கறிவேப்பிலை- சிறிதளவு

எண்ணெய்-1 ஸ்பூன்

கொத்தமல்லி தழை சிறிதளவு

பச்சை மிளகாய்-2

வெங்காயம்-1

செய்முறை:

துளசி இலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து உளுத்தம்பருப்பு மற்றும் கடலைப்பருப்பு போட்டு வதக்கவும். பின்னர் வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு சிறிது வதங்கியதும் துளசி இலை, தேவையான அளவு உப்பு போட்டு 5 நிமிடம் வதக்கவும். பின்னர் சாதத்தை போட்டு சிறிது நேரம் கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும். இந்த சாதம் மிகவும் சத்தான ஆரோக்கியமான உணவாகும்.

Tags:    

Similar News