சமையல்

முருங்கைக்காய் பெப்பர் சிக்கன் கிரேவி

Published On 2022-10-08 09:17 GMT   |   Update On 2022-10-08 09:17 GMT
  • தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
  • சூடான சாதத்தில் போட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ.

முருங்கைக்காய் - 4.

வெங்காயம் - 200 கிராம்.

தக்காளி - 100 கிராம்

பச்சை மிளகாய் - 4.

இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்.

மிளகுத் தூள் - 4 டீ ஸ்பூன்.

மிளகாய் தூள் - தேவைக்கேற்ப

மிளகாய் வற்றல் - 6.

கொத்தமல்லி இலை - 1 கப்.

மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்.

உப்பு - தேவையான அளவு.

எண்ணெய் - 1 குழிக்கரண்டி.

செய்முறை:

சிக்கனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும்.

கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

முருங்கைக்காயையும் துண்டுகளாக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும்.

இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி, முருங்கைக்காய், சிக்கன் சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு, சிறிது தண்ணீர் சேர்க்கவும்.

சிக்கன், முருங்கைக்காய் நன்கு வெந்ததும், மிளகுத் தூளைச் சேர்த்துக் கிளறவும்.

கிரேவி திக்கான பதம் வந்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

இப்போது முருங்கைக்காய் பெப்பர் சிக்கன் கிரேவி ரெடி.

Tags:    

Similar News