சமையல்

நீர்ச்சத்து, நார்ச்சத்து நிறைந்த சுரைக்காய் அடை

Published On 2023-03-07 11:13 IST   |   Update On 2023-03-07 11:13:00 IST
  • மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்துவ உணவாக பயன்படுகிறது.
  • சுரைக்காயை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், மூல நோய் விரைவில் குணமடையும்.

தேவையான பொருள்கள்

இட்லி அரிசி - 200 கிராம்

துவரம் பருப்பு - 50 கிராம்

கடலைப்பருப்பு - 50 கிராம்

பாசிப்பருப்பு - 50 கிராம்

சுரைக்காய் - 100 கிராம்

சின்ன வெங்காயம் - 50 கிராம்

மிளகாய் வத்தல் - 4

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

பெருங்காயத்தூள் - சிறிது

நல்லெண்ணெய் - தேவையான அளவு

கறிவேப்பிலை - சிறிது

கொத்தமல்லித்தழை - சிறிது

உப்பு - தேவையான அளவு

செய்முறை :

இட்லி அரிசி, பருப்பு வகைகள் இரண்டையும் நன்றாக கழுவி தனித்தனியே 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

சுரைக்காய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை மூன்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.

சின்ன வெங்காயத்தை தோலுரித்து பொடிதாக நறுக்கி வைக்கவும்.

ஊறிய பிறகு அரிசி, மிளகாய் வத்தல் மற்றும் உப்பு சேர்த்து கிரைண்டரில் ரவை பதத்திற்கு அரைக்கவும்.

பிறகு அதனுடன் பருப்பு வகைகள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், சுரைக்காய் சேர்த்து கரகரப்பாக அரைத்து பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

பிறகு அதனுடன் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக கலக்கி வைக்கவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து லேசாக நல்லெண்ணெய் தடவவும். தோசைக்கல் சூடானதும் ஒரு குழிக்கரண்டி மாவு எடுத்து தோசைக்கல்லில் ஊற்றி பரப்பவும். சுற்றிலும் நல்லெண்ணெய் ஊற்றவும்.

ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி போடவும். இரு புறமும் வெந்ததும் எடுத்து தட்டில் வைக்கவும்.

இப்போது சுவையான அடை ரெடி.

தேங்காய் சட்னி அல்லது அவியலுடன் சேர்த்து பரிமாறலாம்.

Tags:    

Similar News