சமையல்

வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே செய்யலாம் பாம்பே அல்வா

Published On 2022-12-31 09:42 GMT   |   Update On 2022-12-31 09:42 GMT
  • இது கராச்சி அல்வா, நட்ஸ் அல்வா என்றும் அழைக்கப்படுகிறது.
  • இந்த அல்வாவை மிகவும் சுலபமான முறையில் செய்யலாம்.

தேவையான பொருட்கள்

கார்ன்ஃப்ளார் - 50 கிராம்

சர்க்கரை - 200 கிராம்

நெய் - ½ கப்

ஆரஞ்சு நிறம் - 1 சிட்டிகை

பொடித்த நட்ஸ் - ½ கப்

ஏலக்காய் பொடி - ¼ தேக்கரண்டி

செய்முறை

ஒரு ஒரு பாத்திரத்தில் கார்ன்ஃப்ளார் மாவை போட்டு அதனுடன் 1 ½ கப் தண்ணீர், ஒரு சிட்டிகை கேசரி கலர் சேர்த்து மாவு கரையும் வரை கலக்கவும்.

ஒரு அடிகனமான பாத்திரத்தில் ஒரு கப் சர்க்கரை சேர்த்து அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து சர்க்கரை கரையும் வரை மிதமான தீயில் வைத்து கொதிக்க வைக்கவும்.

சர்க்கரை கரைந்த பின்னர் கரைத்து வைத்துள்ள கார்ன்ஃப்ளார் மாவு கலவையை சேர்த்துக் கலக்கவும்.

குறைவான தீயில் வைத்துக் கொள்ளவும் கிளறும் போது லேசாக கட்டிகள் உருவானால் பயப்பட வேண்டியதில்லை.

கார்ன்ஃப்ளார் மாவு ஓரளவு கெட்டியாக கண்ணாடி பதம் வந்த பிறகு அதில் 1/2 கப் நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.

நெய்யை முழுமையாக சேர்த்த பின்னர் பொடித்த நட்ஸ் சேர்த்து ஓரங்களில் நெய் பிரிந்து வரும் வரை கிளறவும்.

பின்னர் ஏலக்காய் பொடி சேர்க்கவும்.

பாத்திரத்தில் ஒட்டாமல் அல்வா திரண்டு வந்த பிறகு அடுப்பை அணைக்கவும்.

ஒரு தட்டில் நெய் தடவிய பின்னர் தயார் செய்துள்ள அல்வாவை அதில் சேர்க்கவும்.

அதனை ஒரு கரண்டி கொண்டு சமமாக செய்த பிறகு ஓரளவு கெட்டியாகும் வரை ஆறவைக்கவும்.

அல்வா ஆறிய பின்னர் அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பரிமாறவும்.

சுவையான பாம்பே அல்வா தயார். 

Tags:    

Similar News