சமையல்

அட அட.. வாழை இலையில் இப்படியொரு சுவையான அல்வா செய்யலாமா?

Published On 2023-06-02 09:42 GMT   |   Update On 2023-06-02 09:42 GMT
  • பல வகையான அல்வா சாப்பிட்டு இருப்பீங்க.
  • இன்று வாழை இலையை வைத்து அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

வாழை இலை - 2

சோள மாவு - கால் கப்

சர்க்கரை - கால் கப்

முந்திரி - தேவையான அளவு

பூசணி விதை - 1 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சம் பழச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் பொடி - கால் டீஸ்பூன்

நெய் - 6 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* இளசாகவோ, முற்றியதாகவோ இல்லாமல் நடுத்தரமான இரண்டு வாழை இலைகளை எடுத்து நன்றாக சுத்தப்படுத்தி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அவற்றை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு ஊற்றி விழுதாக அரைக்கவும்.

* அடுப்பில் வாணலியை வைத்து, சிறிது நெய் ஊற்றி சூடானதும் அதில் முந்திரி மற்றும் பூசணி விதைகளை தனித்தனியாகப் போட்டு, நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

* அதே வாணலியில் மேலும் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், வாழை இலை விழுதைக் கொட்டி அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

* சோள மாவுடன் சிறிது தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைக்கவும்.

* வாழை இலை விழுது வதங்கி கெட்டியானதும், அதனுடன் சோள மாவு கரைசலை ஊற்றி கட்டிகள் இல்லாமல் கிளறவும். பின்னர் ஏலக்காய் பொடி மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்றாகக் கிளறவும்.

* இப்போது அதில் சிறிது சிறிதாக நெய்யை ஊற்றிக் கிளறி, கலவை வாணலியில் ஒட்டாமல் வரும் பதத்தில் அடுப்பிலிருந்து இறக்கவும்.

* இந்த அல்வாவை நெய் தடவிய தட்டில் கொட்டி, வறுத்த முந்திரி, பூசணி விதையை மேலே தூவி அலங்கரிக்கவும்.

* இப்போது சூப்பரான வாழை இலை அல்வா ரெடி.

ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

Tags:    

Similar News