லைஃப்ஸ்டைல்
முள்ளங்கி கூட்டு

உடலுக்கு குளிர்ச்சி தரும் ரெசிபி

Published On 2021-04-03 05:34 GMT   |   Update On 2021-04-03 05:34 GMT
நீர்ச்சத்து மிகுந்த முள்ளங்கியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுதல் நலம். உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும்.
தேவையான பொருட்கள்:

முள்ளங்கி - கால் கிலோ
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள்தூள் - சிறிதளவு
தனி மிளகாய்த்தூள் - காரத்திற்கேற்ப
உப்பு - தேவைக்கு
சிறு பருப்பு - 50 கிராம்
கடுகு, சீரகம் - தாளிக்க
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்



செய்முறை :

முள்ளங்கியின் தோலை சீவி விட்டு அதனை சிறு சிறு துண்டாக வெட்டி வைக்கவும்.

சிறு பருப்பை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரில் ஊறவைத்த பருப்புடன் முள்ளங்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், தனி மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து அத்துடன் 1/4 கப்பிற்கும் குறைவாக தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விட்டு இரண்டு விசில் வரை வேக விடவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து வேகவைத்த முள்ளங்கி கூட்டில் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

சூப்பரான முள்ளங்கி கூட்டு ரெடி.

இதனை சட்டியிலும் சமைக்கலாம். நீர் சத்துள்ள காய்கறி என்பதால் சமைக்கும் போது அதிகம் தண்ணீர் விட்டு வேக வைக்க தேவை இல்லை.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News