லைஃப்ஸ்டைல்
பூண்டு இஞ்சி மிளகாய் சட்னி

வாய்வுத் தொல்லை வராமல் தடுக்கும் சட்னி

Published On 2021-04-02 05:35 GMT   |   Update On 2021-04-02 05:35 GMT
உணவில் சேர்த்துக்கொள்ளும் இஞ்சி, பூண்டு உணவு செரிமானமாக உதவுகிறது. வயிற்றுப்போக்கு, வயிறு உப்புசம், வாய்வுத் தொல்லைகள் போன்றவை வராமல் தடுக்கிறது.
தேவையான பொருட்கள்

பூண்டு - 12 பற்கள்
இஞ்சி - அரை கப்
காய்ந்த மிளகாய் - 10
உப்பு மற்றும் எண்ணெய் - தேவையான அளவு
புளி - நெல்லிக்காய் அளவு
வெல்லத்துருவல் - அரை டீஸ்பூன்
கடுகு மற்றும் உளுந்து - தலா 1 டீஸ்பூன்

செய்முறை

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் இஞ்சி, பூண்டு, மிளகாய் போட்டு வதக்கவும்.

இத்துடன் உப்பு, புளி சேர்த்து வதக்கி ஆறவிடவும்.

வதக்கிய பொருட்களுடன் சிறிது நீர், வெல்லத்துருவல் சேர்த்து மிக்சியில் அரைத்து கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து சேர்க்கவும்.

காரசாரமான பூண்டு இஞ்சி மிளகாய் சட்னி ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News