லைஃப்ஸ்டைல்
கல்யாண முருங்கை தோசை

பாலூட்டும் தாய்மார்களுக்கு உகந்த தோசை

Published On 2021-03-16 05:27 GMT   |   Update On 2021-03-16 05:27 GMT
முள்ளு முருங்கை இலை(கல்யாண முருங்கை) மருத்துவ குணம் நிறைந்தது. பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறந்த உணவாக கருதப்படுகிறது. நாள் பட்ட சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றை குணப்படுத்தும் சக்தி கொண்டது.
தேவையான பொருட்கள் :

இட்லி அரிசி - 1 கப்
உளுந்து - 1 கைப்பிடி
முள்ளு முருங்கை இலை - 10, 12
சிறிதாக நறுக்கிய வெங்காயம் -அரை கப்                                               
மிளகு - 3/4 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
உப்பு- 1/2 தேக்கரண்டி

செய்முறை:      
                                                                                                          
கீரையை சுத்தம் செய்து சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்.

உளுந்து, அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து, கீரை, மிளகு மற்றும் சீரகம் சேர்த்து அரைக்கவும்.

உப்பு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து கலக்கவும், மாவு தயார். இந்த மாவை புளிக்க வைக்கத் தேவையில்லை.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

சத்தான, சுவையான கல்யாண முருங்கை தோசை ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News