லைஃப்ஸ்டைல்
கடுகு துவையல்

கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் கடுகு துவையல்

Published On 2021-03-01 05:30 GMT   |   Update On 2021-03-01 05:30 GMT
கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு. ஜீரண கோளாறுகளை சரிசெய்ய கூடியதும், ரத்தத்தை சுத்தப்படுத்த கூடியதுமானது கடுகு.
தேவையான பொருட்கள் :

கடுகு - 2 டேபிள்ஸ்பூன்,
புளி - கோலிகுண்டு அளவு,
உளுந்து - 1/2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2,
பெருங்காயத்தூள் - சிறிது
தேங்காய் துண்டு - 2,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

ஒரு வாணலியில் வெறும் கடுகு போட்டு பொரித்து எடுக்கவும்.

பிறகு எண்ணெய் விட்டு உளுந்து, காய்ந்த மிளகாய், தேங்காய், புளி போட்டு சிவக்க வறுக்கவும். அதில் பெருங்காயத்தூள் சேர்க்கவும்.

அனைத்தும் நன்றாக ஆறியதும் மிக்சியில் உப்பு, சிறிது தண்ணீர் தெளித்து அரைக்கவும்.

சுவையான கடுகு துவையல் ரெடி.

இது சற்று துவர்ப்புடன் இருக்கும். தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதத்துக்கு தொட்டுச் சாப்பிட ருசியாக இருக்கும்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News