லைஃப்ஸ்டைல்
குழந்தைகளுக்கு சத்தான மசாலா கார்ன் சாலட்

குழந்தைகளுக்கு சத்தான மசாலா கார்ன் சாலட்

Published On 2021-02-25 06:25 GMT   |   Update On 2021-02-25 06:25 GMT
குழந்தைகளுக்கு மிகவும பிடித்த சிற்றுண்டி தான் மசாலா கார்ன் சாலட். மாலை வேளையில் எண்ணெயில் பொரித்த பலகாரங்களுக்கு பதிலாக இதை செய்து கொடுத்தால் குழந்தைகள் மிக விருப்பமாக சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்

ஸ்வீ ட் கார்ன் -  கப்
சாட் மசாலா - 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
பிளாக் சால்ட் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
வெண்ணெய் -  1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி ? சிறிதளது

செய்முறை

கொத்தமல்லி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஸ்வீ ட் கார்னை வேக வைத்து கொள்ளவும்.

முதலில் வாணலியில் வெண்ணெய்யை உருக்கி அதில் வேகவைத்த ஸ்வீட்கார்னை போட்டு மிதமான தீயில்  5 நிமிடங்கள் வரை வதக்க வேண்டும். பிறகு அதை ஒரு பெரிய பாத்திரத்திற்கு மாற்றி அட்டவணையில் கொடுக்கப்பட்டிருக்கும் மற்ற பொருட்களை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இப்போது மசாலா கார்ன் சால்ட் ரெடி.

விருப்பமிருந்தால் இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், குடைமிளகாய், வெள்ளரிக்காய் போன்றவற்றை சேர்த்து சாப்பிடலாம். இதனால் உடலுக்கு அதிக சத்துக்கள் கிடைக்கும்.

இனிப்பு, புளிப்பு, காரம், ஆகிய மூன்று சுவைகளும் ஒன்று சேர்ந்து மிகவும் ருசியாக இருக்கும் சிற்றுண்டி இது.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News