பெண்கள் உலகம்
சத்தான ஃப்ரூட் லாலிபாப் சாலட்

சத்தான ஃப்ரூட் லாலிபாப் சாலட்

Published On 2021-02-23 10:57 IST   |   Update On 2021-02-23 10:57:00 IST
குழந்தைகளுக்கு பழங்களை சாப்பிட கொடுத்தால் சாப்பிட மறுப்பார்கள். இந்த முறையில் பழங்களை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்

ஸ்டார் ஃப்ரூட் - 2,
மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு - தலா 1 சிட்டிகை,
கருப்பு திராட்சை, லாலிபாப் குச்சிகள்.

செய்முறை

ஸ்டார் ஃப்ரூட்டின் விளிம்பை மட்டும் பீட்டரில் சீவி விடவும்.

மேல்புறம், கீழ்புறம் நறுக்கவும். பிறகு வட்ட வட்டமாக நறுக்கினால்  இயற்கையாகவே ஸ்டார் வடிவம் கிடைக்கும்.

மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு கலந்து நறுக்கிய பழத்தில் தூவவும்.

லாலிபாப் குச்சியில்  முதலில் கருப்பு திராட்சை, ஸ்டார் பழம், மீண்டும் திராட்சை, ஸ்டார் பழம் என குத்தி அலங்கரித்து பரிமாறவும்.

விரும்பினால் கருப்பு  திராட்சைக்கு பதில் பச்சை திராட்சை, செர்ரி குத்தி பரிமாறலாம்.

அந்ததந்த சீசனில் கிடைக்கும் பழங்களை வைத்தும் இந்த ரெசிபியை செய்யலாம்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News