மல்லிகைப்பூ இட்லியும் காரசாரமான மிளகாய் சட்னிக்கு ஈடில்லா இணையாகும். எளிதாக இருந்தாலும் சுவையோ அலாதி. காய்ந்த மிளகாயிலும் பச்சை மிளகாயிலும் பீட்டா கரோட்டின் என்கிற விட்டமின் ஏ சத்தானது அதிகம்.
வரமிளகாய் - 5 அல்லது மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1 பெரியது
புளி - சிறிது,
பூண்டு - 5 பல்
உப்பு- 1 /2 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - 3 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை :
வெங்காயம் தோல் உரித்து பெரிதாக வெட்டிக்கொள்ளவும்
தக்காளியைக்கழுவி பெரிதாக வெட்டிக்கொள்ளவும்
வெங்காயம், தக்காளி, உப்பு, புளி, மிளகாய் அல்லது மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி சேர்த்து நன்றாக அரைக்கவும்.
குறிப்பு : மற்றொரு விதம் இந்தக்கலவையை வதக்கியும் அரைக்கலாம்.
வாணலியில் எண்ணெய் காயவைத்து கடுகு, பெருங்காயம் தாளிக்கவும்.
கறிவேப்பிலை, அரைத்த துவையலையும் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.
சுவையான காரசாரமான மிளகாய் சட்னி தயார்.