லைஃப்ஸ்டைல்
முட்டைகோஸ் பச்சை மிளகாய் சட்னி

தோசை, இட்லிக்கான முட்டைகோஸ் பச்சை மிளகாய் சட்னி

Published On 2021-02-08 05:17 GMT   |   Update On 2021-02-08 05:17 GMT
முட்டைகோஸில் உள்ள தழைச்சத்தும் நார்ச்சத்தும் பெருங்குடலையும், மலக்குடலையும் நன்கு வேலை செய்ய உதவுகின்றன. இன்று முட்டைகோஸ் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

முட்டைகோஸ் - ஒரு கப் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - இரண்டு (நறுக்கியது)
உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்
புளி - கால் எலுமிச்சை பழம் அளவு
உப்பு - தேவைகேற்ப
இஞ்சி - ஒரு சிறு துண்டு
எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
உடைத்த உளுத்தம் பருப்பு - கால் டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிதளவு

செய்முறை

கடாயில் எண்ணெய் இரண்டு டீஸ்பூன் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, கோஸ் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி எடுத்து கொள்ளவும்.

வறுத்த உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், கோஸ் அதனுடன் புளி, உப்பு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உடைத்த உளுத்தம் பருப்பு, கறிவேப்பில்லை போட்டு தாளித்து அதை அரைத்த சட்னியில் கொட்டி பரிமாறவும்.

சூப்பரான கோஸ் பச்சை மிளகாய் சட்னி ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News